ஜப்பான் பிரதமர் யோஷிஹிதோ சுகா பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்த ஷின்சோ அபே கடந்தாண்டு உடல்நிலை பாதிப்பால் பதவி விலகினார்.
அதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக யோஷிஹிதே சுகா பதவியேற்றார். அதுவே அவருக்கு சோதனைக் காலமாக அமைந்து விட்டது என்றே சொல்லலாம்.
கடந்தாண்டு 2 ஆண்டுகளாக உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று ஜப்பானிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது. அங்கு சுகா தலைமையிலான அரசு கொரோனா பரவலைக் கையாண்ட விதம் நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும் கொரோனா பரவலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் யோஷிஹிதே சுகா இம்மாத இறுதியில் நடைபெற உள்ள கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
கொரோனாவை சரியாக கையாளத் தவறிய தனது அரசு மீதான மக்களின் அதிருப்தியை கருத்தில் கொண்டே அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜப்பானின் பிரதமராக ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் தலைவரே பதவி வகிப்பது வழக்கம். சுகாவின் இந்த முடிவு அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளதை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
In your example, your new coat is the topic, not the main idea.