பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அமேசான் ஊழியர்கள்!: அதிர வைக்கும் சர்ச்சை

SHARE

ஆன்லைன் வர்த்தகத்தில் உலகின் முதல் நிலை நிறுவனமாக உள்ளது அமேசான். இந்த நிறுவனத்தில் வாங்கப்படும் பொருட்களை இந்த நிறுவனத்தின் விநியோகப் பிரிவு ஊழியர்களே வீடுகளில் கொண்டுபோய் சேர்க்கின்றனர்.

அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 15 அமெரிக்க டாலர்கள் என்ற ஊதியத்தைக் கொடுத்தாலும், இதுவரை அவர்கள் ஒன்றாக இணையவோ, சங்கம் எதையும் அமைத்துக் கொள்ளவோ அனுமதிக்கவில்லை. ஆனாலும் அதன் சம்பளத் தொகைக்காக பலரும் அமேசானில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் வின்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மார்க் போகேன் என்பவர், ‘அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களை பாட்டில்களில் சிறுநீர் கழிக்க வைக்கிறது, அதிக சம்பளம் கொடுப்பதால் மட்டுமே அமேசான் சிறந்த பணிச் சூழல் நிலவும் இடமாக மாறிவிடாது’ என்று கடந்த மார்ச் 25ஆம் தேதி டுவிட்டரில் பதிவிட்டார். இந்த டுவிட் அமெரிக்காவில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதலில் போகேனின் இந்தக் குற்றச்சாட்டை முழுவதுமாக மறுத்த அமேசான், ‘எங்கள் ஊழியர்கள் பாட்டிலில் சிறுநீர் கழிக்கிறார்கள் என்பதை நீங்கள் நம்பவில்லை அல்லவா? அது உண்மையாக இருந்தால், யாரும் எங்களுக்காக வேலை பார்க்கமாட்டார்கள். உலகெங்கும் லட்சக் கணக்கான அமேசான் ஊழியர்கள் தாங்கள் பணி குறித்து பெருமிதப்படுகிறார்கள். முதல் நாளிலிருந்தே அவர்களுக்கு அதிக ஊதியமும், நல்ல மருத்துவ வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறன’ – என்று பதில் அளித்தது.

ஆனால் அமெரிக்க செய்தி ஊடகங்கள் கள ஆய்வில் இறங்கியபோது, அமேசானில் விநியோகப் பிரிவில் பணியாற்றுபவர்கள் பலரும் போகேனின் குற்றச்சாட்டு உண்மையானதுதான் என்று உறுதி செய்தனர். இந்நிலையில் இண்டெர்செப்ட் என்ற இணையதள ஊடகம், அமேசானின் ஊழியர்கள் பாட்டில்களில் சிறுநீர் கழிக்கும் சர்ச்சை உண்மையானது என்றும், இது குறித்து அமேசானின் உயர் அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரியும் என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தது.

இதற்குப் பிறகு தனது குற்றத்தை மறுக்க இயலாத அமேசான் நிறுவனம் ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது. அதில், 

’எங்கள் முந்தைய விளக்கம் தவறானது. அந்த விளக்கத்தை அளிக்கும் போது நாங்கள் சேவை மையத்தில் பணியாற்றுபவர்களை மனதில் வைத்தே சொன்னோம், எங்களது மிகப் பெரிய ஓட்டுநர்கள் கூட்டத்தை மனதில் கொள்ளவில்லை. எங்கள் சேவை மையங்களில் டஜன் கணக்கில் கழிப்பறைகள் உள்ளன.

அமேசானில் பணியாற்றுபவர்கள் போக்குவரத்து நெரிசல், கிராமப் புறங்களில் பணியாற்றுவது, கொரோனா காரணமாக பொதுக் கழிப்பறைகள் மூடப்பட்டு இருந்தது ஆகிய காரணங்களால் உரிய கழிப்பிடங்களைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டு இருப்பார்கள். இந்த பிரச்னை தொழில் துறையில் பலகாலமாக உள்ளது, இதை நாங்கள் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம்’ – என்று பட்டும்படாமல் கூறப்பட்டு இருந்தது.

அமேசனின் இந்த விளக்கத்தை போகேன் ஏற்கவில்லை. அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘இது என்னைப் பற்றிய விவகாரம் அல்ல, உங்கள் ஊழியர்களைப் பற்றியது. நீங்கள் அவர்களை மரியாதையோடு நடத்தவில்லை. தவறு நடந்ததை முதலில் ஒப்புக் கொள்ளுங்கள், பிறகு அதை சரி செய்யுங்கள். ஊழியர்கள் ஒன்றாகக் கூட அனுமதியுங்கள்’ – என்று கூறி உள்ளார்.

கொரோனா காலத்தில் தொழிலாளர் உரிமைகள் எந்த அளவுக்கு நசுக்கப்பட்டு உள்ளன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சர்வதேச சாட்சியாக மாறி உள்ளது!.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தையின் சிகிச்சைக்காக பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை.!!

Admin

இதென்ன சானிடைசரா? … சுட்டிக்குழந்தையின் வீடியோ வைரல்…

Admin

ஆந்திராவில் மே 31வரை ஊரடங்கு நீட்டிப்பு

சீன பொறியாளர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடிப்பு…13 பேர் பலி…

Admin

பருவநிலை மாற்றத்தால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து…!

Admin

வாய்க்கு போடும் பூட்டு.. உடல் எடையை குறைக்க ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

Admin

தமிழகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம்!

Admin

தாலிபான்கள் பிடியில் ஆப்கான் ..விரைந்தது ஏர் இந்தியா விமானம்!

Admin

இன்று மட்டும் திடீரென்று அதிகரித்த கொரோனா இறப்பு விகிதம் ? காரணம் என்ன?

Admin

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்… உலக சாதனை படைத்த பெண்..

Admin

தடுப்பூசியை வீணாக்காதீர்கள்: பிரதமர் மோடி அறிவுரை!

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: நாளை முக்கிய ஆலோசனை

Leave a Comment