பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்… பாஜக சார்பில் போலீசில் புகார்

SHARE

இந்து கலாச்சாரத்துக்கு எதிரான பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என மயிலாடுதுறை பாஜக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வழக்கம்போல எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. அந்த வகையில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாஜக நகர தலைவர் மோடி கண்ணன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி இந்து கலாச்சாரத்துக்கு எதிராகவும், நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும், பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா 3வது அலை தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்களை திறக்கவும், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தேவையற்றது.இதற்காக 500க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடுகின்றனர்.

கொரோனா காலத்தில் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் அதிரடி கைது

Admin

“வேளாண் பட்ஜெட் இப்படித்தான் இருக்கும்” – அமைச்சர் விளக்கம்

Admin

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இன்று முதல் மாற்றம்..!

Admin

இனி அசைவ உணவகங்களிலும் அரசுப் பேருந்தை நிறுத்தலாம்! – உத்தரவைத் திருத்தியது தமிழக அரசு!.

மதுரை எய்ம்ஸ் பணிகளை தொடங்குக – பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம்..!

Admin

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்..!!

Admin

அஞ்சலை அம்மாள் முதல் அப்துல் கலாம் வரை – யார் யாருக்கு சிலைகள்?

Admin

செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம் – நகரத்தார் வரலாறு குறித்த ஆவணக் காப்பகம்!.

Nagappan

இன்று முதல் ரேஷனில் பொருட்கள் வாங்க மீண்டும் கைரேகை கட்டாயம்

Admin

சாலையில் இனி பெண் காவலர்கள் நிற்க வேண்டாம்…. டிஜிபி திரிபாதி உத்தரவு

Admin

Leave a Comment