சீமானெல்லாம் தலைநிமிர்ந்து வாழ்கிறபோது நான் ஏன் சாக வேண்டும்? – ஜோதிமணி பளார் கேள்வி

SHARE

பாஜகவைச் சொன்னால் சீமானுக்கு ஏன் வலிக்கிறது? என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வியெழுப்பி உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் தமிழக பாஜக மாநில செயலாளரான கே.டி.ராகவனின் பாலியல் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கே.டி.ராகவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

அதாவது தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்றை அறைக்குள் கேமரா வைத்து பதிவு செய்வதே சமூக குற்றம். யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார். அதை காட்சிப்படுத்துவதுதானே சமூக குற்றம். முதலில் அந்த வீடியோவை வெளியிட்டவரை தான் கைது செய்ய வேண்டும் என சீமான் கூறியிருந்தார்.

இதற்கு கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி, சீமான் பாஜகவின் B Team தான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார் என்றும், அவரின் இந்த செயல் வெட்கக்கேடானது என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த சீமான், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் சுரண்டல், பாலியல் கொடுமை பற்றி பேசும் தங்கை ஜோதிமணி போன்றவர்கள் ,உங்கள் கட்சியின் தலைவர் அனுப்பின ராணுவம் பல்லாயிரக்கணக்கான அக்கா, தங்கைகளை, உன்னைப்போன்ற தங்கைகளை வன்புணர்ச்சி செய்து கொலை செய்தார்கள். அதைப்பற்றியெல்லாம் நீங்க ஒரு வார்த்தை பேசல…கண்டிக்கல.

இவர்களுக்கு கண்ணுல தூசியா நான் உறுத்திக்கிட்டே இருக்கேன். படுக்கும்போது என்னைய திட்டி ஒரு பதிவு. எழுந்திருச்சதும் ஒரு பதிவு என கடுமையாக தெரிவித்திருந்தார்.

மேலும் என்னைய பிஜேபியின் பி டீன் என்கிறாய். ரொம்ப கஷ்டமா இருந்தா வெசம் குடிச்சு செத்துப்போ எனவும் சீமான் தெரிவித்திருந்தார்.

இதன் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜோதிமணி, பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்பட்டமாக கே.டி ராகவன் போன்ற பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கின்ற திரு. சீமானெல்லாம் தலைநிமிர்ந்து வாழ்கிறபோது, பெண்களின் பாதுகாப்பிற்கு போராடுகிற நான் எதற்கு விஷம் குடிக்க வேண்டும்? பாஜகவைச் சொன்னால் சீமானுக்கு ஏன் வலிக்கிறது? என காட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

‘ ‘ இது வெறும் குழியல்ல புதையல் ’’ – அமைச்சர் தஙகம் தென்னரசு உருக்கம்!

Admin

பட்டா கத்தியுடனசத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்..

Admin

வைரலான அணில் சர்ச்சை… புகைப்படத்தோடு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Admin

வெளியாகும் புத்தகம்: கலக்கத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை

Admin

வேளாண் பட்ஜெட் நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் – கமலஹாசன்

Admin

கொரோனா சிகிச்சை மையத்தில் தோசை சுட்ட அமைச்சர்!.

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.. தனி விமானத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதி

Admin

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு… சிறப்பு டிஜிபிக்கு ஜாமின்

Admin

அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? – நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

Admin

இந்தியாவில் கொரோனாபலி 42 லட்சம் ? சர்சைக்குள்ளான அமெரிக்க பத்திரிகை

Admin

Leave a Comment