விவிபேட் வேண்டாம்… ஒரே கட்டமாக தேர்தல் நடத்துங்கள்: தமிழக அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

SHARE

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை அமைதியாக நடத்துவற்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நேற்று காலை 10.30 மணி முதல் சென்னையில் இரண்டாவது நாளாக நடந்து வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பேசியது என்ன என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமே இந்த கருத்துக்கேட்பில் கலந்து கொண்டன.

ஆர்.எஸ்.பாரதி (திமுக): கடந்த தேர்தல்போல இல்லாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் இடையே விவிபாட் இயந்திரம் வைக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இது சட்டத்துக்கு புறம்பானது. பொதுமக்கள் அளிக்கும் வாக்கு நேரடியாக கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கு செல்வதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும். இடையில் விவிபாட் இயந்திரத்தை வைப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த நடைமுறையால் 2 சதவீதம் வரை தவறு நடக்க வாய்ப்பு உள்ளதாக ஆணையர்களே ஒப்புக் கொள்கின்றனர். எனவே,இதை மாற்றியமைக்க வேண்டும்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் (அதிமுக): வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகளை முழுமையாக களைய வேண்டும்.ஒரே குடும்பத்தினர் பல வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கும் நிலை உள்ளதை மாற்ற வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து, கூடுதல் துணை ராணுவப் படை, சிசிடிவி கேமரா பயன்படுத்தி சுதந்திரமாக தேர்தல் நடத்த வேண்டும். உள்ளூர்காவல் துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளதால், துணை ராணுவத்தினரை அதிகம் நியமிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலுக்கு முன்பு ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் முதல் கீழ்நிலை வரை அதிகாரிகளை மாற்ற வேண்டும்.

கராத்தே தியாகராஜன் (பாஜக): மாநில தலைவர் அண்ணாமலை சார்பில், கடிதம் அளித்துள்ளோம். தமிழகத்தில் உள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளும் முக்கியமானதாக இருப்பதால், கூடுதல்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வாக்குச்சாவடி, வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். போதிய அளவில் துணை ராணுவப்படையினரை நியமிக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படும்காவல் துறை உயர் அதிகாரிகளுக்குதக்க அறிவுரை வழங்க வேண்டும்.

காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரமோகன்: வாக்களிப்போருக்கு 100 சதவீதம் ஒப்புகைச் சீட்டுவழங்க வேண்டும். ஆணையம் வழங்கும்வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களிக்க சென்றால், பட்டியலில் பெயர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியகுழு உறுப்பினர் பி.சம்பத்: மின்னணுவாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாகமக்களுக்கு சந்தேகம் இருப்பதால்,முதலில் மின்னணு இயந்திரம், அடுத்து கட்டுப்பாட்டு இயந்திரம், தொடர்ந்து விவிபாட் இயந்திரத்தை வைக்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைசெயலாளர் மு.வீரபாண்டியன்: பதற்றமான சூழல் உள்ள இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில்பிரச்சாரம் செய்வது, சாதி, மத, இனஉணர்வுகளை தூண்டுவது ஆகியவற்றை தடுக்க வேண்டும்.

தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி: வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும்.இவ்வாறு வலியுறுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்அரசு வேலை இல்லை: உ.பி.யில் விரைவில் புதிய சட்டம்

Admin

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: பரவாயில்ல இன்றும் அதே விலைதான்

Admin

எச்.ராஜா மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படும்.. பாஜக மாநில தலைவர் எல்.முருகன்..சிக்குவாரா எச் ராஜா?

Admin

பாஜகவின் எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? – குஷ்புவின் பேச்சால் சர்ச்சை

Admin

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்

Admin

வேளாண் சட்ட எதிர்ப்பு: நாடு முழுவதும் கறுப்பு தினம் அனுசரிக்கும் விவசாயிகள்

எம் ஜி ஆர் ஜெயலலிதா பெயர்களை தவிர வேறு யார் பெயரையும் கோஷமிட வேண்டாம் – ஓபிஎஸ் வேண்டுகோள்

Admin

ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியிலும் பயமில்லை: முன்னாள் அமைச்சர் தங்கமணி !

Admin

அடிப்படை அறிவு இல்லாத ஆட்சியாளர்கள் தான் காரணம் .. கோபத்தில் காங்கிரஸ் தலைவர் !

Admin

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

Leave a Comment