ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

SHARE

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்தநாள் பிப்ரவி 24ஆம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதே சமயம் ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக்கொடுத்ததாக சமூக வலைதளங்களில் அவர் குறித்த சந்தேகத்துக்குரிய செய்தி ஒன்றும் உலவி வந்தது.

அந்தச் செய்தியில்,

“அடேய் அடிமைகளா என்னங்கடா கதை இப்படி நாறி போய் கிடக்குது அது அம்மாவும் இல்லை ஆத்தாவும் இல்லையாம்டா வெறும் கோமளவல்லி தானாம். உங்க ஆத்தாவே கை எழுத்து போட்டு கொடுத்திருக்கு.. அது கிடக்கட்டும் அந்த குழந்தை எங்கடா…” என்று பதிவிட்டு ஜெயலலிதா, சோபன் பாபு மற்றும் வசந்தாமணி ஆகியோரின் கையெழுத்துகள் இடப்பட்ட படமும் இணைக்கப்பட்டு பதிவிடப்பட்டு இருந்தது.

பரவி வந்த செய்தியைத் தொடர்ந்து அதன் உண்மைத் தன்மையை அறிய முயற்சித்தோம். 2023 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தபதிவை இப்போது மீண்டும் பரப்பி வருகின்றனர். உண்மை வெட்ட வெளிச்சமாக இணையவெளியில் காணக்கிடைக்கிறது. அப்போதும் முழுமையாக படித்து அறிந்துகொள்ள முயற்சி செய்தோம். இதோ உண்மை.

உண்மை என்ன?

ஈரோட்டை சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘’ஜெயலலிதா – சோபன்பாபுவின் மகன் நான்; என்னை அவர்கள் தத்துக் கொடுத்துவிட்டனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஜெயலலிதா இறந்துவிட்டதால், சசிகலா, என்னையும், என் வளர்ப்பு பெற்றோரையும் கொடுமைப்படுத்துகிறார்,’’ என்றெல்லாம் கூறி, அவர் ஒரு பத்திரத்தையும் சமர்ப்பித்தார். அதில், ஜெயலலிதா, சோபன்பாபு மற்றும் வசந்தாமணி ஆகியோரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, கையெழுத்தும் இடப்பட்டிருந்தது. ஆனால், பத்திர பதிவு நடந்த இடம் ஈரோடு என்றே கூறப்பட்டுள்ளது. 

இதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், ‘‘ஈரோட்டை சேர்ந்த வசந்தாமணியின் சொந்த மகன்தான் மனுதாரர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி. இவர் சுப்பிரமணி என்பவரிடம் முன்தேதியிட்ட பத்திரத்தை வாங்கி, ஜெயலலிதாவின் மகன் என்பதுபோல தத்து கொடுப்பு ஆவணங்களை போலியாக தயாரித்துள்ளார். இவருக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,’’ என்று உறுதி செய்திருந்தனர்.

இதையடுத்து, சென்னை மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான போலீஸார் கிருஷ்ணமூர்த்தி மீது 465 (போலி ஆவ ணம் தயாரித்தல்), 468 (ஏமாற்றும் நோக் கத்தில் போலி ஆவணம் தயாரித்தல்), 193 (பொய் சாட்சி தயாரித்தல்), 419 (ஆள் மாறாட்டம்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த் தியை நேற்று கைது செய்தனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடியுடன் முதல்வர் எயூரப்பா சந்திப்பு

Admin

இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணம் ரத்து – மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Admin

ஆத்தாவுக்கே இந்த நிலைமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

மீண்டும் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

75வது சுதந்திர தினத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!

Admin

அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா 3ஆம் அலை தீவிரமடையும் : எச்சரிக்கும் நிபுணர்கள்

Admin

தோற்க வேண்டிய ஆட்டத்தை வென்றெடுத்த மும்பை இண்டியன்ஸ்!. கோட்டை விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

சே.கஸ்தூரிபாய்

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம்… 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..?

Admin

பட்டா கத்தியுடனசத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்..

Admin

நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் கவலை தருகிறது: தலைமை நீதிபதி பேச்சு!

Admin

Leave a Comment