பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

SHARE

தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா மாரிமுத்து போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார் என்ற பிக் பாஸ் குரல் மூலம் நிகழ்ச்சி ஆரம்பித்தது. 

இப்படி மொட்டையா சொன்னா என்னடா அர்த்தம், தவிர்க்க முடியாத காரணத்துலதான் போயிருக்காங்கன்னு எங்களுக்கே தெரியுதே டா, அது என்ன காரணம் அப்டிங்கறது தானடா முக்கியம்… நமீதா, தாமரைசெல்விக்கு நடந்த சண்டைக்கு, கமல் சார் வந்து பஞ்சாயத்து பண்ணுவாரு, ’இல்லையே நீங்க அப்படி சொன்ன மாதிரி இல்லையே, உங்க நமட்டு சிரிப்புக்கு வேற அர்த்தம் மாதிரி தெரிஞ்சுதே’ன்னு கொஞ்சம் எண்ணைய ஊத்திட்டு போயிருப்பாரு…. எதுக்குமே வழி இல்லாம போச்சே… – என பார்வையாளர்களுள் மைண்ட் வாய்ஸ் ஓடிக் கொண்டிருந்தது…

இந்த சீசனோட முதல் பஞ்சாயத்து நாள்ல, கமலின் பேச்சில் கிண்டல், கேலி, எல்லாம் இருந்தது, ஆனா அவரோட பேச்சு கொஞ்சம்… சாரி…. ரொம்ப போராவும் இருந்தது. அகம் டிவியே வழியே அகத்திற்குள் சென்றதும் கமல் ”ஆன்லைன் கிளாஸ்லாம் இப்பதான் ஆரம்பித்தார்கள், ஆனா நான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சுட்டே”ன்னு சொன்னாரு. அது உண்மையாகவே ஆன்லைன் கிளாஸ் போலத்தான் இருந்தது.

வாரம் முழுவதும் நடந்த ஹவுஸ்மேட்ஸ்களின் நடவடிக்கைகளை மேற்கோள் காட்டிப் பேசினார் கமல். பிரியங்கா மற்றும் நிரூப்பின் சமையல் அறை பேச்சுகள். வருண் ’இந்த நிகழ்ச்சிலதான் இருக்கீங்களா?’ன்னு கேட்டது, சிபியை பார்த்து ’டீ போட கத்துக்கோங்க அது உங்கள எங்கயோ கொண்டு போயிடும்’னு சொன்னது, மதுமிதாவின் கொஞ்சும் தமிழ், அண்ணாச்சியின் ஆங்கிலம் கற்றல், சீக்கிரம் சொந்த வீடு வாங்க சொல்லி இசைவாணிக்கு வாழ்த்து கூறியது, எல்லார் கதையிலும் குறை கண்டுபிடிச்சுட்டு இருந்தா எப்படி கதாசிரியர்னு ராஜூவை குறிப்பிட்டது என்று அனைவரின் நடவடிக்கைகளையும் கூறினார். 

சின்னபொண்ணுவின் கதைக்கு டிஸ்லைக் கொடுத்தற்கான காரணத்தையும் ராஜூவிடம் கேட்டார். சின்னபொண்ணுவும் சொல்ல மறந்த கதைன்னு, கொஞ்சம் கதைய சொல்ல மறந்துட்டனு மறுபடியும் கதை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் யார்லா கதை சொல்லலன்னு மீதி இருக்குறவங்களுக்கு கதை எப்படி சொல்லப்போறீங்கன்னு கேட்டாரு கமல். 

கடைசியா உங்க கதையில சுவாரஸ்யம் இருக்கோ இல்லையோ, உண்மை இருக்கனும் என்று கூறினார் கமல். சுருதியின் கதை சமூகத்துக்கு எடுத்துகாட்டு, எல்லாரும் நோ சொல்ல பழகிக்கணும் – என்று கூறியது, பாவ்னியோட கதையை கொஞ்சம் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது, பாவ்னியோட வலி அதை அனுபவிக்குறவங்களுக்கு தான் தெரியும் என்று கூறியது என்று தொடர்ந்து பேசிய கமல், கூடவே நீட் தேர்வுக்காக மாணவர்கள் தற்கொலை செய்வது எவ்வளவு பெரிய மடத்தனம் என்றும் சொன்னார். 

ஐக்கியின் தமிழ் ஆர்வத்தைப் பாராட்டி, புலம்பெயர் தமிழர்களின் பெற்றோர்களுக்கு உள்ள தமிழ் ஆர்வம் இங்குள்ள பெற்றோர்களுக்கு இருந்திருந்தால் நாம ஏன் தமிழ் வாழ்க என்று தனியாக கோஷம் போட வேண்டும் என்றும் கூறினார். 

தமிழ் இன்னும் உங்களை போன்றோரால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று ஐக்கியை வாழ்த்தினார் கமல். சனி ஞாயிறு சாப்பாடு வெளிய இருந்து வந்து ஹவுஸ்மேட்ஸ்லாம் சாப்பிட, ’தயவு செஞ்சு குப்பையெல்லாம் தொட்டியில போட்டு ப்ளேட் மட்டும் ஸின்க்ல வைங்க’ன்னு சொன்னங்க சுருதி… இது எப்போ பஞ்சாயத்தாகுமோ…


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வைரலான அணில் சர்ச்சை… புகைப்படத்தோடு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Admin

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

Admin

கர்நாடக பழங்குடியினரை நடுவழியில் இறக்கி விட்ட லாரி ஓட்டுநர்… கைகொடுத்த தமிழக மக்கள்…

Admin

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் பாலியல் வழக்கில் கைது

Admin

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

Admin

உதயநிதி ஸ்டாலினுடன் இறகுப் பந்து விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

சைக்கிளில் சென்று வாக்களித்த நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ…

சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு பறந்த புகார் – உடனடியாக மீட்பு

Admin

நீட் விவகாரம் : இதெல்லாம் அயோக்கியத்தனம்.. ஆ.ராசாவின் பழைய வீடியோவை காட்டி எடப்பாடி குற்றச்சாட்டு!

Admin

முதல்வரிடம் ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

மகளிர் இலவச பயணச்சீட்டை விற்ற நடத்துனர் சஸ்பெண்ட்!

Admin

சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.!!!

Admin

Leave a Comment