பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார் : கடுப்பான கே.எஸ். அழகிரி!

SHARE

பொதுத்துறை நிறுவனங்கள் விவகாரத்தில் பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜவஹர் மற்றும் அவரது
ஆதரவாளர்கள் உட்பட 500 பேர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி நாட்டிற்கு லாபம் தரக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்பனை செய்வதை கடுமையாக கண்டிப்பதாக கூறினார்.

மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு செல்வதால் , இந்தியாவின் பொருளாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகும். என கூறிய அழகிரி , பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை மோடி அறுப்பதாக கூறினார்.

அதே போல் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினால், கேள்விக்கான பதிலை வழங்காமல், அவர் ஒரு கேள்வியை எழுப்பி வருகிறார்.

நிதித்துறை குறித்து தெரியாத நபர் நிதி அமைச்சராக உள்ளார். தமிழகத்தில் கலால் வரியை குறைத்த முதல்வர் ஸ்டாலின் திறமையானவரா? அல்லது 7 வருடம் பெட்ரோல் விலையை அதிகரித்த மோடி திறமையான பிரதமரா? என்பது நாட்டுக்கே தெரியும் என பேசினார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

சொன்னதை செய்தார் தங்கம் தென்னரசு!. நியாயமான விலையில் சிமெண்ட் விற்கப்படும் என உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு.

Admin

நீட் ஆய்வுக்குழு அமைத்தது செல்லும் :உயர்நீதிமன்றம் அதிரடி

Admin

அவதூறான 130 வழக்குகள் ரத்து! எந்தெந்த தலைவர்கள் தெரியுமா?

Admin

சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.!!!

Admin

பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்… பாஜக சார்பில் போலீசில் புகார்

Admin

வாழும் பென்னிகுவிக் – யார் இந்த ககன் தீப் சிங் பேடி?

சென்னையில் இலவச WiFi வசதி -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Admin

கரும்பூஞ்சை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை!: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

Leave a Comment