ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

SHARE

கொரோனா நிவாரணத் தொகையாக குடும்பங்களுக்கு தலா ரூ.4000 தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முதல் தவணை ரூ.2000 வழங்கும் பணிகள் இன்று தொடங்குகின்றன.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது கொரோனா நிவாரண நிதியாக பொதுமக்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்று திமுக அறிவித்து இருந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் அந்த வாக்குறுதியை திட்டமாக்கினார்.

அதன் அடிப்படையில் தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணையாக ரூ.2000 வழங்கும் பணிகளை இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதன்படி குடும்ப அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு முதலில் டோக்கன்கள் வழங்கப்படும். அந்த டோக்கன்களை நியாயவிலைக் கடைகளில் கொடுத்து ரூ.2000 பெற்றுக் கொள்ளலாம். 

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இந்த டோக்கன்களில் நிவாரணம் தொகை வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்தத் தொகை 500 ரூபாய் நோட்டுகளாகவோ 2000 ரூபாய் நோட்டாகவோ வழங்கப்படும். தமிழகத்தில் குடும்ப அட்டைகள் வைத்துள்ள 2 கோடியே 7 லட்சம் பேர் இதனால் பயனடைய உள்ளார்கள்.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கீழடி அகழாய்வை நீட்டிக்க வேண்டும் : பா.ம.க ராமதாஸ் கோரிக்கை

Admin

கி.ரா. எனும் கதை கேட்பவர்!.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை..!!

Admin

இந்தியாவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாகக் காரணமான சுந்தர்லால் பகுகுணா மறைந்தார் – யார் இவர்?

கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் பலி – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Admin

ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு

பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்… அமைச்சர் சேகர்பாபு

Admin

இயக்குநரின் மனைவி கொரோனாவுக்கு பலி: உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி…

75வது சுதந்திர தினத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!

Admin

தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு : மு.க.ஸ்டாலின்!

Admin

ஓ.பி.எஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்.!!

Admin

தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருக்கா..? சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

Admin

Leave a Comment