சேலத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

SHARE

சேலம் மாவட்டம் ஆத்தூரில் போலீசாரால் தாக்கப்பட்ட முருகேசன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் முருகேசனை போலீசார் தாக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆத்தூர்- இடையப்பட்டி சோதனைச் சாவடியில் வெள்ளையன் என்ற முருகேசன் மது போதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.

போலீசாரின் தாக்குதலை தாங்க முடியாத முருகேசன் மயங்கிய விழுந்துள்ளார் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முருகேசன். 

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு தலையில் போலீசார் தாக்கியதே காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது முருகேசன் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

இது தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்… அமைச்சர் சேகர்பாபு

Admin

பாலியல் வன்கொடுமை குற்றவாளியை சுட்டுப்பிடித்த சென்னை போலிஸ் – நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை..!!

Admin

90% மக்களிடம் கைபேசிகள்… தமிழ்நாடு வளர்ந்த மாநிலம்… – நிதியமைச்சர் சொல்வது சரியா?

சாலையில் இனி பெண் காவலர்கள் நிற்க வேண்டாம்…. டிஜிபி திரிபாதி உத்தரவு

Admin

இந்த பட்ஜெட் டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் பட்ஜெட் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Admin

ஊரடங்கில் தளர்வு.. 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு!

Admin

சவுக்கு சங்கர் விபத்தில் இறந்தாரா?…கடைசியா என்னையே கண்டெண்ட் ஆக்கீட்டீங்களேடா!

Admin

சட்டம் என்பது குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல… நடிகர் சூர்யா

Admin

Leave a Comment