CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

SHARE

அறிவுள்ள மக்களிடம் யாரும் மோசமான பொய்களைப் பரப்பி ஆட்சி செய்ய முடியாது. ஆனால், உண்மையை சரிபார்ப்பதற்காக அரசுத் தரப்பில் உருவாக்கப்பட்ட அமைப்பும் கூட கடமைக்கு பதில் சொல்லும் நிலைமைதான் தமிழ்நாட்டில் மேலும் வருத்தமளிக்கிறது.

“சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியைக் காணச் சென்றவர்களுக்கு இலவச பேருந்து வசதியை திமுக அரசு செய்துள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் ஒரு தனியார் அமைப்பின் நிகழ்ச்சிக்கு அரசு இலவச பேருந்து ஏற்பாடு செய்வது விதிமீறலாகும்.”

எனவே திராவிட முன்னேற்ற கழக அரசின் மீது விதிமீறல் புகாரளிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த தகவல் பொய்யானது என்று விளக்கும் விதமாக “ஐபிஎல் போட்டிகளுக்கு இலவச பேருந்து டிக்கெட் – அரசு செலவல்ல” என்று அரசின் உண்மை சரிபார்ர்பு குழு தரப்பில் ஒரு உண்மை சரிபார்ப்பு வெளியிடப்பட்டது.

அதில், “சிஎஸ்கே அணியே அதற்கான பணத்தை நிர்வாகத்திடம் செலுத்தி விட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எந்த ஆதார ரசீதுகளும் இணைக்கப்படவில்லை. ஐபிஎல் தரப்பிலிருந்து பெறவில்லை என்றாலும் போக்குவரத்து கழக தரப்பிலிருந்து பணம் பெறப்பட்ட ரசீதையாவது இணைத்திருக்கலாம். அரசாலேயே பெற முடியாத அளவுக்கு அது ரகசியமான ரசீதா என்ன?

ஏதோ அரசியல்வாதிகளின் குறிப்பு போல அதன்போக்கில் வெறும் வார்த்தைகளால் பதிலளித்தால் போதும் என்ற எண்ணத்தைதான் வெளிப்படுத்துகிறது அச்செய்தி. ஆதாரங்களற்ற இந்த ‘உண்மை சரிபார்ப்பு’ செய்தியை அவர்கள் வெளியிடுவதன் நோக்கம் உண்மையை வெளியிடுவதா அல்லது அரசுக்கு துணைபோவதா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது.

பரவி வரும் பொய்ச்செய்திகளுக்கு மத்தியில், எந்த ஒரு பொய்யையும் ஆதாரத்தோடு பொய் என்று நிரூபிக்கும் பொறுப்பு இந்தக் குழுவுடையது. அதற்காகவே பிரத்யேகமாக தமிழ்நாடு அரசால் இந்தக் குழு கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

போதை ஏறிபோச்சு.. ஊரடங்கில் ஒயின் குடித்த எலிகள்

Admin

போலீசார் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

டவ்-தே புயல் பாதிப்பு: குஜராத்தில் உயிரிழப்பு 53ஆக அதிரிப்பு

எலான் மஸ்க் செய்த வேலையால் தமிழக நிறுவனத்திற்கு ரூ. 7 கோடி லாபம்?

Admin

மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி

Admin

கமலா ஹாரீஸுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

மறைந்த இசை கலைஞருக்காக சிறப்பு கூகுள் டூடுள் வெளியீடு..!!

Admin

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

Leave a Comment