இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி

SHARE

கொரோனா இரண்டாவது அலையில் மத்திய அரசுதோல்வி அடைந்தது போல் அல்லாமல் மூன்றாம் அலையினை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டுமென காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கொரோனா தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, காணொலி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்:

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகும் 3-அலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு முதல் மற்றும் இரண்டாவது அலையில் தோல்வி அடைந்ததுபோல் அல்லாமல், மூன்றாவது அலையை எதிர்க்கொள்ள வேண்டும். தவறுகளை அரசு திருத்திக் கொள்ளவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், மூன்றாவது அலை நிச்சயம் எனில்அதை எதிர்கொள்ள தேவையான மருந்துகள், ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவமனைகள் போன்றவற்றை தயார் செய்ய வேண்டும்.

 முதல் மற்றும் இரண்டாவது அலையில் செய்த தவறுகளை அரசு மீண்டும் செய்துவிடக்கூடாது. நேற்று, அதிக அளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இது, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வரை தொடர வேண்டும் என கூறினார்,

மேலும் ராகுல் பெட்ரோல் டீசல் விலை குறித்து தனது மற்றொரு ட்விட்டர் பதிவில் :

பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போது குறையும்?

அடுத்த தேர்தல் எப்போது நடைபெறும் என கேள்விஎழுப்பியுள்ளார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தந்தை திட்டியதால் பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்

Admin

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

மூன்றாவதாக ஒரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் பலி… தொடரும் சோகம்…

20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் ஏன் தெரியுமா?

Admin

புதுச்சேரியில் சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ தேர்வு

Admin

சமூக ஊடகங்களை வைத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்க கூடாது- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Admin

நீக்கப்படும் எடியூரப்பா… போர்க்கொடி தூக்கும் லிங்காயத்து மடாதிபதிகள்

Admin

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை – போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு

‘டிசம்பர் 31 கடைசி நாள்’ – வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

Admin

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

Leave a Comment