ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

SHARE

ஐபிஎல் லீக் தொடரின் நேற்றைய முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதினர். இதில் அபாரமான ஆட்டம் தந்து ஹாட்ரிக் வெற்றி அடைந்தது  ராயல் சேலஞ்சர்ஸ் அணி. 

சேப்பாக்கம், சென்னை

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  தொடக்க ஆட்டக்காரர்களாக படிக்கல் மற்றும் கோலி களம் இறங்கினார்கள்.  ஆனால் ஆட்டத்தின் 2 வது ஓவரிலேயே வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார் கோலி. அதற்கு பிறகு வந்த ரஜத்தின் விக்கெட்டும் அதே ஓவரில் போனது.  கோலியின் விக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்தாலும் அதற்கு பிறகு தான் ஆட்டமே களைகட்டியது. 

அடுத்து ஆட வந்த மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை தந்தார். மேக்ஸ்வெல் மற்றும் படிக்கல் இருவரும் வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். மேக்ஸ்வெல் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸர் என்று தெறிக்கவிட்டார். இவர்களின் பார்ட்னர்ஷிப் பிரஷித் கிருஷ்ணா ஓவரில் உடைந்து, படிக்கல் 25 ரன்னில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல்  78 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த டிவில்லியர்ஸ்ஸின் ஆட்டத்தில் சேப்பாக்கமே தெறித்தது. ஆட்டத்தின் இறுதி மூன்று ஓவர்களில் மட்டும் பந்துகளை பறக்க விட்டு  56 ரன்கள் எடுத்தார். டிவில்லியர்ஸ் மட்டும் 34 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து, அணியின் ஸ்கோரை 204 க்கு கொண்டு வந்து ஆட்டத்தை முடித்தார். 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியினர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கினார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சில் கொல்கத்தா அணி தொடக்கம் முதலே தடுமாறியது என்றே சொல்ல வேண்டும். கில் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே அவுட்டானார். நான்கு ஓவருக்கு ஒரு விக்கெட் என ஆட்டம் சென்றது. அடுத்தடுத்த வீரர்கள் அடித்து ஆடினாலும் நின்று ஆட முடியவில்லை. இறுதியில் ரஸல் கொஞ்சம் நின்று ஆடினார். ஆனால் கடைசி மூன்று ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்க முடியாமல் திணறிய ரஸல், பிறகு ஹர்ஷல் பட்டேல் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். 19.1 ஓவரில் 162 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது கொல்கத்தா அணி. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து – வருகிறது 2-டிஜி!

கோகோ கோலா வேண்டாம்… தண்ணீர் பாட்டில் போதும்… ரொனால்டோவின் வைரல் வீடியோ

Admin

கருப்புப் பூஞ்சைக்கான மருந்து மே 31 முதல் விநியோகம்!.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

முதல் குவாலிபையர் போட்டி… சி.எஸ்.கே.வில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்னென்ன?

இரா.மன்னர் மன்னன்

ருதுராஜ், தோனி அபாரம்… 9ஆவது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது சி.எஸ்.கே…

இரா.மன்னர் மன்னன்

மேகதாது அணை விவகாரம்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

Admin

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

புதுச்சேரியில் சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ தேர்வு

Admin

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

எங்கே செல்லும் இந்தப் பாதை? – அக்னிபாத் கிளப்பும் கேள்விகள்…

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

Leave a Comment