ஆப்கனை விட்டு வெளியேறும் மக்கள் – விமானத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் அவலம்

SHARE

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விமானத்தில் தொங்கியபடி மக்கள் செல்லும் காட்சிகள் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படைகளும், அமெரிக்கப் படைகளும் வெளியேறத் தொடங்கியபின் தாலிபான்கள் பல்வேறு மாகாணங்களை படிப்படியாக கைப்பற்றி வந்த நிலையில் நேற்று தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.இந்நிலையில், ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

விமானங்கள் அனைத்திலும் முந்திக்கொண்டு ஏறுவதால் நிலைமை கை மீறியுள்ளது. இதனையடுத்து அங்கு மக்கள் மீது இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் பலியாகினர்.

இதனிடையே காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் இடம் கிடைக்காததால் வெளிபுறத்தில் ஏறிக்கொண்டனர். ஆனால் விமானம் வானில் புறப்பட்டு சென்ற போது அதன் சக்கரத்தில் தொங்கிக் கொண்டு சென்ற 3 பேர் மேலிருந்து கீழே விழும் காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொலை… ஆதாரம் கொடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் உயரிய ஊடக விருது!.

Admin

குழந்தையின் சிகிச்சைக்காக பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை.!!

Admin

உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. : ஆண்டனி பிளிங்கன்

Admin

டுவிட்டர் தடையின் எதிரொலி… நைஜீரியாவில் கால் பதிக்கும் இந்திய செயலி….

Admin

பிரிட்டனின் உயரிய விருதினை பெற்ற இந்திய வம்சாவளி பெண்

Admin

பிரான்ஸ் அதிபருக்கு கன்னத்தில் பளார் விட்ட இளைஞர் … பரபரப்பான பிரான்ஸ்!

Admin

வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

மனித ரத்தத்திலும் நுழைந்த பிளாஸ்டிக்! – உலகை உலுக்கிய ஆய்வு முடிவு!

தங்கப் பதக்கத்தில் 7.5%தான் தங்கம் இருக்கும்!.. ஒலிம்பிக் பதக்கங்கள் பற்றிய சில வித்தியாச தகவல்கள்…

இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு..

Admin

‘குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும்தான் நீங்கள்’ – பெண்கள் குறித்து தாலிபான்கள் சர்ச்சை கருத்து

Admin

நிற வெறிப் படுகொலைக்கு ரூ.196 கோடி இழப்பீடு!

Admin

Leave a Comment