ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் துப்பாக்கி முனையில் செய்தி வாசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஆட்சி நடத்தி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் மக்கள் மீதான தாலிபான்களின் அடக்கு முறையை வெளிப்படுத்தும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
அதன்வரிசையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தாலிபான்களை பார்த்து பயப்பட வேண்டாம், அவர்கள் தீங்கற்றவர்கள் என ஆப்கன் செய்தி வாசிப்பாளர் ஒருவர் மரண பீதியில் செய்தி வாசிக்க அவர் பின்னால் துப்பாக்கிகளுடன் தாலிபான்கள் நிற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்