கொற்கை அகழாய்வில் கிடைத்த பழங்கால வெளிநாட்டு நாணயம்…!

SHARE

கொற்கையில் நடந்த அகழாய்வில் பழங்கால வெளிநாட்டு நாணயங்கள், கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மட்பாண்ட பொருட்கள் போன்றவை இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வகையில் கொற்கையில் தொல்லியல் துறை இயக்குனர் தங்கத்துரை, அலுவலர் ஆசைத்தம்பி உள்ளிட்ட குழுவினர் அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே அங்கு 9 அடுக்கு கொண்ட சுடுமண் குழாய், பல அடுக்கு செங்கல் கட்டுமானம், சங்கு அறுக்கும் கூடம், சங்காலான அலங்கார மோதிரங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மாரமங்கலத்தில் தோண்டப்பட்ட குழியில் வெளிநாட்டைச் சேர்ந்த பழங்கால செம்பு நாணயம், அலுமினிய நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஏற்கனவே கண்டறியப்பட்ட பல அடுக்கு செங்கல் கட்டுமானத்தின் அருகில் சுமார் 3 அடி உயர மட்பாண்ட கொள்கலனும் கிடைத்துள்ளது. மேலும் பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும், துறைமுக நகராகவும் சிறப்புற்று விளங்கிய கொற்கையில் 2 வெளிநாட்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பண்டைய காலத்தில் தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்தது உறுதியாகியுள்ளது.

அகழாய்வு பணிகள் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ள நிலையில் கொற்கையில் கடல்சார்ந்த ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக அரசு பட்ஜெட்டில் ரூ.5 கோடி ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கீழடியில் 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு.!!

Admin

கால்நடை என்ற சொல் ஏன் மனிதர்களுக்குப் பொருந்தாது?.

Admin

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 1: சிற்ப இலக்கணம் ஒரு அறிமுகம்.

தொல்லியல் அறிஞர்களை ஈர்க்கும் மீனவர் வீடு – யார் இந்த பிஸ்வஜித் சாஹு?

Pamban Mu Prasanth

கீழடியில் தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டெடுப்பு.!!

Admin

வெம்பக் கோட்டை அகழாய்வு – வெளிவரத் தொடங்கிய தமிழர் பொக்கிஷங்கள்!.

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – விநோத வரலாறு: பாகம் 2.

Admin

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 11. 4 வகை எழிற்கை முத்திரைகள்

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 6: தொழிற் கை முத்திரையின் வகைகள் (13 – 16)

Leave a Comment