மலேரியாவுக்கு தடுப்பூசி… 30 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி!.

SHARE

மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் மலேரியா தடுப்பூசி என்ற பெருமையும் இதற்குக் கிடைத்து உள்ளது.

மலேரியா கொசு மூலம் பரவும் ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது. இது கொரோனா வைரஸை விடவும் ஆபத்தானது. இந்த மலேரியா ஒட்டுண்ணி சீக்கிரமே நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை தளர்த்திவிடும்.

ஆயிரக்கனக்கான ஆண்டுகளாக மனிதகுலத்தின் மிகப்பெரிய பேரிடர்களில் ஒன்றாக மலேரியா இருந்துள்ளது. முதலில் இது கெட்ட காற்றால் பரவும் நோய் என கருதப்பட்டது. மலேரியா – என்ற சொல்லுக்கே கெட்ட காற்று என்றுதான் அர்த்தம். பின்னரே மலேரியா கொசுவால் பரவுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் உலக அளவில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மலேரியாவால் இறந்துள்ளனர். இதில் அதிர்ச்சியூட்டக் கூடிய பகுதி, இப்படி இறப்பவர்களில் பெரும்பாலானோர் 5 வயதிற்குட்டப்பட்ட குழந்தைகள். அதாவது ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை மலேரியாவால் இறக்கின்றது. மலேரியாவால் அதிகம் பாதிக்கப்பட்டது ஆப்பிரிக்க மக்கள்தான். ஆப்ரிக்காவுக்கு அடுத்த ஆசிய நாடுகளிலும் மலேரியா பெரிய சிக்கலாக உள்ளது. 

சில நாடுகள் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மலேரியவை ஒழித்து உள்ளன. 11 நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு மரணம் கூட மலேரியாவால் ஏற்படவில்லை. ஆனால் ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் மலேரியா குறித்து பெரிதும் அலட்சியம் காட்டப்படுகின்றது.

இந்நிலையில், ஆப்ரிக்காவில் சுமார் 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட மருத்துவ போராட்டத்திற்கு பிறகு, இந்தத் தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.  GlaxoSmithKline Plc, Mosquirix உள்ளிட்ட பல நிறுவனங்களின் கூட்டு உழைப்பால் எம்ஆர்என்ஏ என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தத் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு  RTS, S/AS01 என்று பெயரிடப்பட்டு உள்ளது.  இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வில் ஆப்ரிக்க உள்நாட்டு அறிவியலாளர்களே பெரிதும் பங்காற்றினர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

2019ஆம் ஆண்டு முதலே  கானா, கென்யா, மலாவி ஆகிய நாடுகளில் தடுப்பூசியின் கிளீனிக்கல் ட்ரையல் நடந்து, வெற்றி அடைந்துள்ளது. 8 லட்சத்திற்கும் அதிகமாக ஆப்ரிக்கர்கள் இதை செலுத்தி உள்ளனர். மலேரியா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் 2 வயதுக் குழந்தைகளுக்கே 4 டோஸ் வரை செலுதப்பட்டு உள்ளது. இதுவரை பெரிய பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை.

இதனால் உலக சுகாதார அமைப்பு ஆப்பிரிக்காவிலும், மற்றும் மலேரியா பரவல் அதிகம் உள்ள பகுதிகளிலும் தடுப்பூசி போடவேண்டும் என்று கூறியுள்ளது. உலக சுகாதார நிறுவன இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ’இது ஒரு வரலாற்று தருணம் இதனால் இனி ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான இளம் உயிர்களை காப்பாற்ற முடியும்’ என்று கூறியுள்ளார். 

100 க்கும் மேற்பட்ட மலேரியா ஒட்டுண்ணிகள் உள்ளது. இதில் மிகவும் கொடிய மற்றும் பொதுவாக ஆப்பிரிக்காவில் இருக்கும் பிலாஸ்மோடியம் ஃபால்சிராம் என்னும் வகையை கொல்லக்கூடியதுதான் இந்த தடுப்பூசி. இந்த தடுப்பூசி மூலம் மலேரியாவின் தாக்கத்தை 30% வரை குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பெரியம்மை, போலியோ வரிசையில் மலேரியாவையும் ஒழிக்கும் நாள் விரைவில் வரலாம் என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தடுப்பூசியை மாற்றிப்போட்ட சுகாதாரத்துறை! – உ.பி.யில் இன்னொரு அவலம்.

மனித ரத்தத்திலும் நுழைந்த பிளாஸ்டிக்! – உலகை உலுக்கிய ஆய்வு முடிவு!

கொரோனா இரண்டாம் அலை – தற்காத்துக் கொள்வது எப்படி?

ஜூலை 19ம் தேதிக்கு பின் ஊரடங்கு இருக்காது.. பிரதமர் நம்பிக்கை

Admin

ஹாரி-மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தைக்கு இந்த பெயரா? – மகிழ்ச்சியில் இணையவாசிகள்.

Admin

மஞ்சள் பூஞ்சை எனும் மரண தூதுவன்!.

இன்னும் 90 நாட்களுக்குள் காபூல் தாலிபன்களிடம் வீழும் : அமெரிக்கா எச்சரிக்கை

Admin

வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

ஒரே சளி தொல்லை டாக்டர்… தனி ஆளாய் மருத்துவமனைக்கு சென்ற 3 வயது சிறுமி

Admin

காஷ்மீரில் லித்தியம் தனிமம் : இந்தியாவின் பொருளாதாரமே மாறப்போகின்றதா?

Nagappan

இந்திய ஆணழகன் கொரோனாவால் உயிரிழந்தார்!

இயக்குநரின் மனைவி கொரோனாவுக்கு பலி: உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி…

Leave a Comment