நான் தான் அப்பவே சொன்னேனே.. சீனாவை வம்பிழுக்கும் டிரம்ப்!

SHARE

கொரோனா வைரசின் முதல் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட  நாடு அமெரிக்கா. அப்போது அதிபராக இருந்த டிரம்ப் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். இந்நிலையில் தற்போது  வெளியான செய்திகளில், உகானில் உள்ள ஆய்வகத்திலிருந்தே கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா அரசு கூறுகிறது.

அதே சமயம் அந்த வைரஸ் அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என சீன அரசு பதில்கூறியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் தோற்றத்தை 90 நாட்களில் கண்டுபிடிக்குமாறு உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இதனால் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் ஆய்வகத்தில் இருந்தே பரவியது என அனைத்து தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்த சூழலில் முன்னாள் அதிபர் டிரம்ப், “நான் அப்போதே கூறினேன் சீன வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என்று… நான் கூறிய கருத்தை இப்போது எதிர் கட்சியினரும் சொல்லத் தொடங்கி விட்டனர். கொரோனாவைரசினை பரப்பி பேரழிவு ஏற்படுத்திய சீன அரசு அமெரிக்கா மற்றும் பிற உலக நாடுகளுக்கு 10 டிரில்லியன் டாலர் வழங்க வேண்டும்” கூறியுள்ளார். டிரம்ப் தற்போது பதவியில் இல்லை ஆனால் சீன அரசின் மீதான விமர்சனங்களை டிரம்ப் இப்போது வரை மாற்றிக்கொள்ளவில்லை


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – இந்த 11 ஆவணங்களில் ஒன்று போதும்

எம் ஜி ஆர் ஜெயலலிதா பெயர்களை தவிர வேறு யார் பெயரையும் கோஷமிட வேண்டாம் – ஓபிஎஸ் வேண்டுகோள்

Admin

துப்பாக்கி முனையில் செய்தி வாசித்த பத்திரிக்கையாளர்.. வைரல் வீடியோ

Admin

அஞ்சலை அம்மாள் முதல் அப்துல் கலாம் வரை – யார் யாருக்கு சிலைகள்?

Admin

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

75 வாரங்களுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை… ரஜினிகாந்த் அறிக்கை

Admin

‘கொங்குநாடு’கோரிக்கை: இலக்கிய ஆதாரத்தை தவறாக பதிவிட்ட வானதி சீனிவாசன் !

Admin

’இதெல்லாம் தேவையில்லாத ஆணி’: திருமாவை எதிர்க்கும் முகநூல் வாசிகள்

Admin

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு.!!

Admin

Leave a Comment