இஸ்ரேலில் 12 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்து நப்தாலி பென்னட் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் 2009,முதல், பெஞ்சமின் நெதன்யாகுதான் பிரதமராக இருந்து வருகிறார் அங்கு கடந்த 2 ஆண்டுகளாக எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில், அதிக இடங்களை பெஞ்சமின் நெதன்யாகு கட்சி பிடித்தது.
ஆனால், அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறியான நிலை நீடித்தது.
இதற்கிடையே, அங்கு 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் கை கோர்த்து ஆட்சி அமைக்க திட்டமிட்டனர்.
இந்த நிலையில்கூட்டணிக்கு நாடாளுமன்ற அங்கீகாரம் அளிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் வலதுசாரி யாமினா கட்சியின் தலைவரான நாஃப்டாலி பென்னட் தலைமையிலான கட்சி வெற்றி பெற்றது.
120 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன ஒரு உறுப்பினர் வாக்களிக்க கல்ந்து கொள்ளவில்லை.
ஆகவே இஸ்ரேலின் 13 ஆவது பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றார்.
தற்போது அமைந்த புதிய அரசில் 27 அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா். அவா்களில் 9 பேர் பெண்கள் உள்ளனர்.
நாஃப்டாலி பென்னட் தலைமையிலான கூட்டணியில் 8 கட்சிகள்உள்ளன இதில் முதல்முறையாக ஓா் அரபுக் கட்சியும் இடம்பெற்றுள்ளது கவனிக்கதக்கது.
கூட்டணியில் முக்கிய கட்சியான யெஷ் அடிட் கட்சித் தலைவர் யாயிர் லபீட்டுடன் பென்னட் அதிகார பகிர்வு ஒப்பந்தம் செய்துள்ளார்.
அதன்படி, முதல் இரு ஆண்டுகள் பென்னட்டும், அடுத்த இரு ஆண்டுகள் லபீட்டும் பிரதமராகப் பதவி வகிப்பார்கள்.
1996 முதல் 1999 வரை பிரதமராகப் பதவி வகித்த நெதன்யாகு, 2009-ஆம் ஆண்டுமுதல் தொடா்ந்து 12 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வந்தார். இதனையடுத்து அவரது ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது புதிதாக பதவியேற்கவுள்ள பென்னடின் ஆட்சியில்பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் ஆக்ரோஷ போக்கை இது குறைக்குமா? அதற்கான பதிலை வரும் காலங்கள் தான் கூறும்..