குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

SHARE

குஜராத்தில் கடும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கும் டவ்தே புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, 1000 கோடி ரூபாய் நிவாரண உதவியை அறிவித்து உள்ளார்.

குஜராத்தில் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த டவ்தே  புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் மற்றும் வெள்ளத்துக்கு பலர் பலியாகி உள்ளதாகவும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

ராணுவத்தினர் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றி, போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் பணியிலும், அரசு அதிகாரிகள் புயல் சேத விபரங்களை கணக்கெடுக்கும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் குஜராத் மாநிலம் பாவ்நகர் சென்ற பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி ஆய்வு செய்தார். பிரதமருடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு முடிந்தபோது குஜராத்துக்கு இடைக்கால நிவாரணமாக 1000 கோடி ரூபாயை பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் டவ்-தே புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை நிலவரப்படி குஜராத்தில் புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது.

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லி கேப்பிடல்ஸ்சை சிதறடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

சே.கஸ்தூரிபாய்

ராபியாவைக் கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் : கொதித்தெழுந்த ஜோதிமணி

Admin

நீச்சல் உடையில் எங்கள் கொடியா ? அத்துமீறிய அமேசான் .. கொந்தளித்த கர்நாடக அரசு!

Admin

எங்கே செல்லும் இந்தப் பாதை? – அக்னிபாத் கிளப்பும் கேள்விகள்…

“மிகப்பெரிய திட்டம் வருது” … மோடியின் சுதந்திர தின உரையில் வெளியான அறிவிப்பு

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு!: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!.

Admin

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

கொரோனா வார்டில் செவிலியரிடம் அத்துமீறிய வாலிபர் … ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

Admin

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ வழக்கு .. காரணம் என்ன?

Admin

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ஆர்பிஐ

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் :அறிக்கை அனுப்ப உத்தரவு!

Admin

Leave a Comment