பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து… காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்…

SHARE

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் மஜூலி என்ற இடத்தில் இருந்து பயணிகள் படகு ஒன்று நிமதி படித்துரை நோக்கி சென்று கொண்டிருந்தது. எதிர்திசையில் மற்றொரு படகு சென்றது.

ஜோர்ஹாட் பகுதியில் வந்த போது இரண்டு படகுகளும் வந்தபோது திடீரென்று எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் படகுகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ள நிலையில் பலர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தகவல் அறிந்த மாநில மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 60க்கும் அதிகமானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படகு விபத்து குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அசாம் மாநிலத்தில் படகு விபத்து குறித்த செய்தி கவலை அளிக்கிறது.

மாயமான பயணிகளை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

Admin

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

75 வாரங்களுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

Admin

புதுச்சேரியில் சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ தேர்வு

Admin

டெல்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை: காரணம் என்ன?

Admin

பங்குச் சந்தையில் கால் பதிக்கிறது ஜொமோட்டோ..!!

Admin

ஆம்புலன்ஸ் சைரன் வேண்டாம்!: மணிப்பூர் அரசு உத்தரவு.

மேதைகளின் மேதை அம்பேத்கர்! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

கொரோனா 3ம் அலை வருமா என தெரியாது :எய்ம்ஸ் தகவல்!

Admin

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

பாஜக அலுவலகம் கட்ட வைக்கப்பட்ட கல்லினை பிடுங்கி எறிந்த விவசாயிகள்

Admin

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!

Admin

Leave a Comment