2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை: அமைச்சர் பதில்!.

SHARE

புதுடெல்லி.

கடந்த 2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்.

பணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர்தான் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்பட்டன. தொடக்கத்தில் அதிகமாக மக்களிடம் புழங்கிய இந்த 2000 ரூபாய் வங்கித்தாள்களை சமீப காலங்களில் காணவே முடியவில்லை. 

இதனால் நாடாளுமன்றத்தின் மக்களவையில் ‘2000 ரூபாய் வங்கித்தாள்கள் மீண்டும் அச்சடிக்கப்படுகின்றவா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட, இந்தக் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமான விரிவான பதிலை அளித்தார்.

அதில், கடந்த 2016-17ஆம் ஆண்டில் 354 கோடியே 39 லட்சம் 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சடிக்கப்பட்டதாகவும், 2017-18ஆம் ஆண்டில் அது 11 கோடியே 15 லட்சமாகக் குறைக்கப்பட்டதாகவும் , 2018-19ல் அந்த எண்ணிக்கை இன்னும் குறைகப்பட்டு 4 கோடியே 666 லட்சம் 2000 ரூபாய் வங்கித்தாள்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் 2019 ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக 2000 ரூபாய் பணத்தாள்கள் அச்சிடப்படவே இல்லை – என்றும் கூறப்பட்டு உள்ளது.

நிதியமைச்சகத்தின் இந்த பதிலானது, ’2000 ரூபாய் வங்கித்தாள்களின் வருகை எதிர்பார்க்கப்பட்ட பலனை அளிக்கவில்லை’ என்று பொருளாதார நிபுணர்கள் பலரும் கூறிய குற்றச்சாட்டை ஏற்பதாகவே அமைந்துள்ளது.

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

செப்டம்பர் 17 முதல் இந்த சேவை நிறுத்தம்.. சொமேட்டோ அதிரடி அறிவிப்பு

Admin

தலைவர்களை புகழ்ந்து பேச தடை போட்ட முதல்வர்… காரணம் என்ன?

Admin

7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்காது – கே.எஸ்.அழகிரி

சிக்கிய முன்னாள் அமைச்சர்.. வங்கிக் கணக்கு முடக்கப்படுமா?

Admin

தி ஃபேமிலி மேன் 2 தொடரை உடனே தூக்குங்க: அமேசானுக்கு கடிதம் எழுதிய சீமான்

Admin

தமிழ்நாடு அரசின் திறமைக்கு சவாலா? சென்னை பல்கலைக்கழக விவகாரம் என்ன?

Pamban Mu Prasanth

அஞ்சலை அம்மாள் முதல் அப்துல் கலாம் வரை – யார் யாருக்கு சிலைகள்?

Admin

இனிப்பு, கசப்பு மற்றும் அதிக காரம் இது தான் இப்போ : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

பேரணிலாம் போக வேண்டாம்… ஊருக்கு போங்க – பிரதமருக்கு அனுமதி மறுத்த மாநகரக் காவல்துறை

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

Admin

Leave a Comment