Factcheck: அதிமுகவால் தான் சிஏஏ சட்டம் நிறைவேறியதா? உண்மை என்ன தெரியுமா?

SHARE

குடியுரிமை திருத்தச் சட்டம் ( சி.ஏ.ஏ) நிறைவேறியதற்கு அதிமுகதான் காரணம் என்று நாடு முழுக்க ஒரு செய்தி பரவி வருகிறது. தொடர்ச்சியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிய திமுகவினர் இதை தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

முதலில் பரப்படும் செய்தி என்ன என்பதை புரிந்து கொள்வோம். மொத்தம் பதிவான வாக்குகளில் ஆதரவாக 125, எதிர்ப்பாக 105 வாக்குகள். இதில் அதிமுகவின் 10 வாக்குகள் ஆதரவாக பதிவானதால் தான் இந்த சட்டம் நிறைவேறியது என்று செய்தி பரவி வருகிறது.

இந்த செய்தியின் பின்னணியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் பலரும், அதிமுகதான் இதற்கு காரணம் என்று பேசி வருகின்றனர்.

உண்மை என்ன?

எளிமையாக புரிந்து கொள்வோம். இந்திய மாநிலங்களவையில் 245 இடங்கள் உள்ளன. இதில் 50%க்கு மேல் வாக்குகள் பெற்றால் ஒரு மசோதா, சட்டாமாக நிறைவேற்றப்படுவதற்காக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அல்லது, அன்றைய தினம் அவையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து வாக்குகளின் எண்ணிக்கை மாறுபடும். அதாவது 122.5 பேர் என்பது நிலையான எண்னிக்கை அல்ல, குறையலாம்.

குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களையில் விவாதத்துக்கு வந்த அன்று நடந்தது இதுதான். மொத்தம் பதிவான வாக்குகளே 224 தான். எனில் 112 வாக்குகள் பெற்றாலே ஒரு மசோதா நிறைவேற்றப்படலாம்.

மாநிலங்களவையில் நடந்தது என்ன?

அன்று, அதிமுகவுக்கு ராஜ்யசபாவில் இருந்த இடங்கள் 10.

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு  ஆதரவாக இருந்த வாக்குகள் 125. எதிர்ப்பாக விழுந்த வாக்குகள் 99. இதுதான் உண்மையான தகவல்.

எதிர்ப்பாக விழுந்த வாக்குகள் 105 என்பது உண்மையல்ல. அது மக்களவையில் விழுந்த வாக்குகளின் எண்ணிக்கை. அதைத்தான் சில ஊடகங்கள் தவறாக வெளியிட்டு விட்டன.

இப்போது, கொஞ்சம் சிற்றறிவு கொண்டு சிந்தித்து பார்த்தால், நமக்கே புலப்படும். அதிமுகவின் 10 வாக்குகள் ஆதரவு  அளிக்காமல், எதிர்த்து வாக்களித்ததாக வைத்துக் கொள்வோம்.

ஏற்கனவே, எதிர்ப்பாக பதிவான 99 வாக்குகளுடன் 10 வாக்குகள் சேர்ந்தாலும் 109 வாக்குகள்தான் எதிர்ப்பாக இருக்கும். அப்போதும் 115 வாக்குகள் ஆதரவாக பதிவாகி மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறியிருக்கும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சட்டம் என்பது குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல… நடிகர் சூர்யா

Admin

நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு?

Admin

வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா?: ரிசர்வ் வங்கி சொல்வதைக் கேளுங்கள்…

Admin

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 27 நாளில் தூக்குதண்டனை

Admin

சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி காலமானார்

பெற்றோரை இழந்த குழந்தைகள்.. வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி

Admin

4ஆவது முறையாக கோப்பை… சாதித்த சென்னை சூப்பர் கிங்ஸ்…

இரா.மன்னர் மன்னன்

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… 4 மாவட்டங்களுக்கு மட்டும் போக்குவரத்து சேவை அனுமதி

Admin

தவன் அதிரடி! – பஞ்சாப்பை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி!.

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

Leave a Comment