12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத்தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக பள்ளிகள் இயங்காதால் 12ஆம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக வாட்ஸ்அப் ஆப் மூலம் அலகுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள வழிமுறை நெறிமுறைகளில் மாணவ மாணவிகளுக்கு தனித்தனி வாட்ஸாப் குழுவில் வினாத்தாள்கள் அனுப்பி தேர்வுகள் நடத்த வேண்டும்- என்பது உள்ளிட்ட வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
- கெளசல்யா அருண்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்