பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

SHARE

உலக மனநல நாள் என்பதால், கமல் புத்தக பரிந்துரையுடன் ஆரம்பித்தார் நிகழ்ச்சியை. The Emerging Mind’ என்கிற நூல். புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் வில்லியனூர் ராமசந்திரன் எழுதியது. 

அகம் டிவி வழியே அகத்திற்குள் என்று ஹவுஸ்மேட்ஸை சந்திக்க, உபசரிப்பு முடிந்ததும், எலிமினேஷன் இல்லை, அதனால ஜாலியா பேசுங்கன்னு ஆரம்பித்தார். கிச்சன் டீம், வேலைகளை சரியாக செய்கிறதா என்று அந்த டீமை தவிர மற்றவர்களை கேட்டு விசாரித்தார்.  பூண்டு குழம்பு ரொம்ப நல்லா இருந்தது, சாப்பாட்டை வீணாக்குவதில்லை, சின்னபொண்ணு சமையல் டீம் நன்றாக செய்கிறார்கள் என்று கூறினர் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும். 

அதே கிச்சன் டீமில் இருக்கும் பிரியங்காவும், நான் என் வீட்ல, டைனிங் டேபிள் தாண்டி போனது இல்ல, ஆனா இப்போ இங்க கிச்சன்லியே  இருக்க, நானே சமைக்குறதுனால சாப்பிட தோண மாட்டேங்குது. அப்படியே சாப்டாலும், அடுத்தவங்ளுக்கு பத்தாம போயிடுமோன்னு நினைச்சு சாப்பிடுறேன் என்று கூறினார். 

வீடு சுத்தம் செய்யும் அணியும் சிறப்பாக செய்வதாக மற்ற ஹவுஸ்மேட்ஸ் கூறினர். பாத்ரூம் டீம் தலைவர் ராஜீ, ’இவர் பாத்ரூம் டீம்தான் ஆனா இவர் சரியா வர்றதில்லை’ன்னு அபிஷேக்கை மாட்டி விட்டார். பாத்திரம் கழுவும் டீமிலும் தலைவர் இல்லை(நமீதா) என்றாலும் வேலை சரியாக நடக்கிறது என்று கூறினார் ஹவுஸ்மேட்ஸ். 

எல்லாமே நல்லா இருந்தா எப்படி, நாமினேஷன் இனிமேதான் இல்லையா அதான் எல்லாமே நல்லா இருக்கு, நாளையில் இருந்து தெரியும் உங்க லட்சணம் என்று நக்கலடித்தார்  கமல். 

தன்னோடு இருப்பவர்களை மட்டும் ரிவ்யூ செய்த அபிஷேக்கை அழைத்து மற்ற ஹவுஸ்மேட்ஸை ரிவ்யூ செய்யுங்கள் என்று கூறினார் கமல். அனைவர் பற்றியும் கூறிய அபிஷேக், பிரியங்காவிடம் வரும்போது, தன் அக்காவை மிஸ் செய்வதாக கூறி கண்கலங்கினார். பிரியங்காவும் இவனோட வீடியோலா பாத்து எரிச்சலாகி இருக்கேன், ஆனா இங்க வேற மாதிரி இருக்கான், நான் இவன தப்பா நினைச்சுட்டேன்-னு சொன்னாங்க பிரியங்கா. 

ஆளாளுக்கு மற்றவர்களை இப்படி புகழ்ந்து கொண்டு, அன்பு காட்டிக் கொண்டு இருந்தால் எப்படி என்று யோசித்த கமல்,ஒவ்வொரு போட்டியாளரும் உங்களுக்கு பிடித்த இல்லனா பிடிக்காத போட்டியாளரைப் பற்றி கூறுங்கள் என்று கேட்டார். 

வெளியில வேற மாதிரி இருந்தாங்க, ஆனா இங்க பழகினதுக்கு அப்புறம் வேற மாதிரி தெரியுறாங்க அப்படின்னு உங்களுக்கு தோணுகிறவர்களை சொல்லுங்கள் என்று கமல் தன்னுடைய வார்த்தை ஜாலத்தில் கூறினார். போட்டு வாங்குறாராம்…

உடனே எல்லாரும் நிரூப்பிடம் வந்தனர். ஆள் பாக்க பயில்வான் மாதிரி சார், ஆனா குழந்தை சார் அவரு அப்படின்னு பிரியங்கா கூற, ஆமா சார் பொன்னம்பலம் மாதிரி இருந்துட்டு செந்தில் மாதிரி காமெடி பண்றாரு சார் அப்டின்னு பங்கமாக கலாய்த்தார் ராஜு. 

அஷரா அதிக பேசாமல் ஆட்டிடியூட் காண்பிப்பதாக இசையும் மற்றவர்களும் கூற அதற்கு பதிலடியும் கொடுத்தார் அஷரா…. நான் ஒரு introvert person, மத்தவங்க நல்லா பேசினா பேசுவேன், அவங்க பேசலைனா நானும் பேச மாட்டேன்ன்னு சொல்லி, ’இசை வந்து நான் கருப்பா இருக்குறதுனால பேச மாட்டேங்குறீங்களான்னு கேட்டாங்க, அது என்ன மக்களுக்கு தப்பா காட்டிடும்னு நான் அவங்ககிட்ட பேசாம அவாய்ட் பண்றேன்’-னும் சொன்னாங்க. ஆனா இவங்ககிட்ட நல்லா பேசிக்கிட்டு இருந்த தாமரையே இவங்களுக்கு டிஸ்லைக் கொடுத்ததை அஷரா கவனிக்கவில்லை. 

கமல் போட்டு வாங்கியது ஹவுஸ்மேட்ஸிடம் நன்றாகவே வேலை செய்தது. இமான் மற்றும் சின்னபொண்ணுவுக்கு இடையில் சின்ன பிரச்சனை போலிருக்கிறது என்னவென்று சரியாக பேசவில்லை இருவரும். 

நிறைய டிஸ்லைக் பெற்றவர்களில் நாடியாவும், வருணும் வரிசையில் இருந்தார்கள். இந்த வீட்ல எல்லரையும் பிடிக்கும் பிடிக்காதவங்கன்னு யாரும் இல்லை என்று கூறினார் தாமரை.

இன்னும் கொஞ்சம் போட்டு வாங்குவோம்னு இமான் அண்ணாச்சியை அழைத்தார் கமல், இந்த பிக் பாஸ் டைட்டிலை காமெடியன் ஜெயிக்கனும்னு சொன்னீங்க, அப்போ இந்த வீட்ல ஹீரோ யாரு, வில்லன் யாரு அப்படின்னு போட்டாரு கமல். வில்லன் அஷரா என்றும், ஹீரோவா ஜெயிக்குற தகுதி சின்னபொண்ணுக்கு இருக்குன்னும் சொன்னாரு இமான்.  இந்த பார்வை எல்லாம் நாமிஷேன் வரவரைக்கும் தான் என்று விடை பெற்றார் கமல். 

இரவில் தனக்கு அதிக டிஸ்லைக் கிடைத்ததை நினைத்து அழுது கொண்டிருந்தார் அஷரா…

  • சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்..!!

Admin

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

Admin

ஊரடங்கு தொடருமா? முதல்வர் நாளை ஆலோசனை

Admin

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 34 இன்ஸ்பெக்டர்கள்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

Admin

கி.ரா. எனும் கதை கேட்பவர்!.

”இறுதி வார்த்தை…” மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் – 05.

இரா.மன்னர் மன்னன்

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Admin

”எதிர்பாராத விபத்து..!”. மரணத்தின் விலை – தொடர். அத்தியாயம் 3.

இரா.மன்னர் மன்னன்

கரும்பூஞ்சை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை!: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் சமஸ்கிருத கல்வெட்டியாளர் தேவை என்ன? – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி

Admin

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை..!!

Admin

Leave a Comment