மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க சுற்றுச்சூழல்துறை அனுமதி தேவையில்லை..அமைச்சர் துரைமுருகன்

SHARE

செங்கல் சூளை வைத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி, மண் எடுத்துக்கொள்ளலாம் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 30ம் தேதி, தமிழக அரசு சார்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு , எடுக்கப்படும் மணலுக்கு சுற்றுசூழல் துறை அனுமதி தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.

தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்களும் மண் எடுக்க கோரிக்கை விடுத்துள்ளதால், அவர்களுக்கென தமிழக அரசு ஒரு புதிய முடிவு எடுத்துள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அதன்படி ஒன்றரை அடிக்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது கனிமவளங்களை சுரண்டுவதற்கு இணையாகாது என்பதால், ஒன்றரை அடி வரை மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இதற்கான கட்டணத்தை மணல் எடுப்போர் அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Admin

உற்சாக வாக்கிங்… திறக்கப்பட்ட டீக்கடைகள்… இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…

Admin

திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

Admin

ட்விட்டரில் கணக்கு தொடங்கிய “ஒன்றிய உயிரினங்கள்”… காரணம் இதுதான்…!

Admin

4ஆவது முறையாக கோப்பை… சாதித்த சென்னை சூப்பர் கிங்ஸ்…

இரா.மன்னர் மன்னன்

மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் அதிரடி கைது

Admin

தமிழுக்கு அகரமுதலி தந்த வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று… யார் இந்த வீரமாமுனிவர்?

இரா.மன்னர் மன்னன்

வெளிநாட்டு பெண் அளித்த பாலியல் புகாரில் கராத்தே மாஸ்டர் மீது அதிரடி நடவடிக்கை

Admin

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை..!!

Admin

தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 37 லட்சம் பேர்…இதுவரை ரூ.67 கோடி வசூல்..

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

Leave a Comment