பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா..!!

SHARE

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, கடந்த 2019 ஜூலை 26ம் தேதி பாஜக ஆட்சி அமைத்தது.

எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். இவருக்கு 78 வயதாகி விட்டதால், பாஜக கட்சியின் கொள்கைப்படி பதவியில் இருந்து விலக வேண்டும்.

அவரை பதவி நீக்கம் செய்யும்படி கர்நாடக பாஜக எம்எல்ஏ.க்கள், அமைச்சர்களில் ஒரு பிரிவினர் பல மாதங்களாக போர்க்கொடி தூக்கி வந்தனர்.

இன்றுடன் தனது 2 ஆண்டு ஆட்சி காலத்தை எடியூரப்பா நிறைவு செய்கிறார். இதற்கிடையே கடந்த வாரம் டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். பின்னர், கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டால் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் எடியூரப்பா அறிவித்தார்.

இந்நிலையில், தனது பதவியை ராஜானாமா செய்வதாக அறிவித்துள்ளார் எடியூரப்பா. கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்ற அதேநாளில் தனது ராஜினாமாவை அறிவித்தார் எடியூரப்பா. இவரின் இந்த அறிவிப்பு கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

தமிழகத்தை உளவு பார்க்க வந்துள்ளாரா..புதிய ஆளுநர்?

Admin

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

எங்கள் திட்டத்தில் தமிழக கிராமங்கள் கிடையாது: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

ஆம்புலன்ஸ் சைரன் வேண்டாம்!: மணிப்பூர் அரசு உத்தரவு.

டவ்-தே புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்தியாவுக்குள் மீண்டும் நுழைகின்றதா டிக்டாக்?

Admin

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ம.பி.அரசு

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

Leave a Comment