டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

SHARE

டெல்லியில் தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டிய நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

டெல்லி

கொரோனானாவின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பூசிகளை  இந்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யதது மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. 

அதற்கு அடிப்படையாக அமைந்தது இந்தியாவில் இருந்து 95 நாடுகளுக்கு 6.63 கோடி தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தளத்தில் அரசே வெளியிட்ட ஒரு பதிவுதான். அதன் படி 

வங்கதேசத்துக்கு103 லட்சம் தடுப்பூசிகள், மொராக்கோ வுக்கு 70லட்சம் தடுப்பூசிகள், பிரிட்டனுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள்,  சவுதி அரேபியாவுக்கு 45 லட்சம் தடுப்பூசிகள், மியான்மருக்கு 37 லட்சம் தடுப்பூசிகள், நேபாளத்துக்கு 24.48 லட்சம் தடுப்பூசிகள் என இந்தியா வாரி வழங்கி உள்ளது.

அந்தத் தடுப்பூசிகளை இந்தியர்களுக்கு அளித்திருந்தால் இந்தியாவில் இரண்டாவது அலை இப்படி கோர தாண்டவம் ஆடி இருக்காது என்றும், கிடைத்த இடைவெளியை இந்தியா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தால்தான் கொரோனா பரவலில் இந்தியா உலகிலேயே இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டதாகவும் அறிவியலாளர்கள் இந்திய அரசை விமர்சித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களும், இந்தியாவில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு எப்படி வந்தது? நம் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்? என்ற கேள்விகளை எழுப்பினர். இதே கேள்விகளை டெல்லியில் சிலர் போஸ்டர்களாகவும் ஒட்டினர். 

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல் துறையினர் விசாரணை நடத்தி போஸ்டர்களை ஒட்டியதாக 25 பேரைக் கைது செய்து, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்தனர்.

உரிய ஆதாரத்தின் அடிப்படையில், மக்கள் நலனுக்காக கேள்விகளைக் கேட்டவர்கள் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் பிரதீப் குமார் யாதவ் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். டெல்லி காவல்துறையினரின் செயலுக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக பிரதமரை விமர்சித்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி “என்னையும் கைது செய்யுங்கள்” (ArrestMeToo)எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பலரும் அந்தப் போஸ்டரையும், இது தொடர்பான செய்திகளையும் பதிவிட்டும் பகிர்ந்தும் வருகின்றனர். தமிழகத்தில் நடிகை ஓவியாவும் ‘என்னையும் கைது செய்யுங்கள்’ என்று பதிவிட்டு உள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர், நடிகை ஓவியாவின் முகநூல் பதிவு, டெல்லி போஸ்டரின் தமிழ்ப்படுத்தப்பட்ட போஸ்டர் ஆகிய மூன்றுமே சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உங்கள் நடவடிக்கை சூப்பர் : முதல்வரை பாராட்டிய உயர்நீதிமன்றம் காரணம் என்ன?

Admin

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு.. சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Admin

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் பாலியல் வழக்கில் கைது

Admin

தமிழகமே தாய்வீடு…ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

Admin

தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளது – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

Admin

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா தப்பியோட்டம்!

Admin

தோல்வியும் இல்லை… விக்கெட்டும் இல்லை… தொடர் வெற்றியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

வாரத்தில் ஒருநாள் மது இலவசம்: மாநில அரசின் அதிரடி திட்டம்

Admin

15 கோடி மக்களுக்கு கொரோனா… அபாயத்தை உணர்த்தும் புள்ளிவிவரம்.

Leave a Comment