சிவசங்கர் பாபாவின் பள்ளியை மூட கோரி பரிந்துரை…!!

SHARE

சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை மூட மாவட்ட குழந்தைகள் நல குழுமம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு, அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்தது.

தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தில் சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து விளக்கம் அளிக்க சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டதால் சிபிசிஐடி அதிகாரிகள் டேராடூன் சென்றனர். ஆனால் போலீசார் அங்கு வருவதை தெரிந்து கொண்ட சிவசங்கர் பாபா அங்கிருந்து டெல்லிக்கு தப்பிச் சென்றார்.

இருப்பினும் தனிப்படை போலீசார் அவரை டெல்லியில் வைத்து இன்று கைது செய்தனர்இந்நிலையில் சர்ச்சையில் சிக்கிய சென்னை கேளம்பாக்கம் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை மூட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

Pamban Mu Prasanth

பப்ஜி மதனின் யூடியூப் பக்கத்தை முடக்கிய காவல்துறை

Admin

ஆத்தாவுக்கே இந்த நிலமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

அதிகரிக்கும் கொரோனா காரணமாக சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை

Admin

7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்காது – கே.எஸ்.அழகிரி

ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Pamban Mu Prasanth

நீட் தேர்வு பாதிப்பு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

Leave a Comment