தமிழர்கள் என்ற அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை எனவும், தமிழர்கள் என்ற அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்வதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.
- கெளசல்யா அருண்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்