ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

SHARE

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

கொரோனா நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரும்பாலான சேவைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டாலும், பிற மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கான தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

இந்நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா? கூடுதல் தளர்வுகள் வழங்கலாமா? என்பது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் அந்த ஆலோசனையில், காதாரத்துறை மற்றும் பிற துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். அவர்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகு, முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

மேகதாது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!!

Admin

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

“தெரியாது…தெரியாது” – மதுரை எய்ம்ஸ் குறித்து மத்திய அரசின் அதிர்ச்சி பதில்

Admin

எம்ஜிஆரை தவறாக சித்தரிப்பதா..? கோபமானமுன்னாள் அமைச்சர்

Admin

மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?, கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது ஏன்?- ஈபிஎஸ் பேட்டி

Admin

பொதுச் செயலாளரும் விலகினார்!… கலகலத்தது மக்கள் நீதி மய்யம்.

பப்ஜி மதன் வழக்கு நாளை மீண்டும் விசாரணை!

Admin

மம்தா பானர்ஜி- சோசியலிசத்தின் திருமண பத்திரிக்கை… இணையத்தில் வைரல்

Admin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை டுவிட்டரில் புகழ்ந்த பவன் கல்யாண்.!!

Admin

சொல்லின் செல்வர் சோ.சத்யசீலன் காலமானார்!

Admin

Leave a Comment