வேலைக்கு சிபாரிசு கேட்டு வராதீங்க. . அமைச்சர் வீட்டில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…

SHARE

அமைச்சா் எஸ்.ரகுபதிக்கு சொந்தமான வீட்டில் சிபாரிசு செய்யுமாறு கேட்டு யாரும் வரவேண்டாம் என ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் ஊழல் இல்லாமல் அனைத்து பணிகளும் வெளிப்படையாக நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி அனைத்து அமைச்சர்களும் அவர்களின் துறைகளில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக டெண்டர்கள்,அரசு பணிகளில் சேருவதற்கு யாருக்கும் சிபாரிசு செய்யக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஜூன் 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்ட நீதிமன்ற வேலை வந்தாச்சு 3557 காலியிடம் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வைகடந்த மாதம் ஆயிரக்கணக்கானோர் எழுதினர்.

இந்நிலையில் நீதிமன்ற பணியாளர்கள் நியமனம் தொடர்பாக பரிந்துரை கடிதம் கோரி யாரும் வரவேண்டாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் வீட்டு வாசலில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

காலியாக உள்ள 3,557 இடங்களை தேர்வு செய்வதற்கு சிலர் அமைச்சரின் சிபாரிசு மூலம் நீதிமன்ற பணியாளர் வேலையை பெறுவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது.

இதனால் அமைச்சா் வீட்டில் நீதிமன்றத்தில் உள்ள பணியிடங்களுக்கு தேர்வு எழுதியுள்ளவர்களின் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் வழங்கப்படும் என்றும், வேலை குறித்து அமைச்சரை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

Admin

இன்று அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம்..!!

Admin

காவலர்களுக்கு கட்டாய விடுமுறை – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

நான் என்ன பிரதமரா? கேள்வி எழுப்பிய மதன் பதில் கொடுத்த காவல்துறை!

Admin

கோவாக்சின் 2ஆம் தவணைக்கு உடனே பதிவு செய்யவும்!

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: நாளை முக்கிய ஆலோசனை

மக்களின் பொருளாதார வல்லுநர்… யார் இந்த ஜெ.ஜெயரஞ்சன்?

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

பத்திரப்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Admin

தமிழகத்தை பிரதமர் மோடியே பாராட்டினார்..அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Admin

9 – 11ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு இல்லை: பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டம்

Admin

சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

Leave a Comment