ஹைட்ரோ கார்பனுக்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதிகளை வழங்காது – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

SHARE

டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் அறிக்கையினை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் :

டெல்டா மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையிலுள்ள வடதெரு என்ற கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையினை மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 10.6.2021 அன்று வெளியிட்டுள்ளது.

இதனை உடனடியாக நிறுத்தவேண்டுமென வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தொன்றுதொட்டுத் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், தமிழர் நாகரிகத்தின் ஆணிவேராகவும் காவிரிப் படுகை விளங்கி வருகிறது.

”சோழ நாடு சோறுடைத்து” என்ற சொல் நெடுங்காலமாக உள்ளது. இவ்வுளவு பெருமை கொண்ட காவிரிப் படுகை பகுதியையும், அதனைச் சார்ந்திருக்கும் விவசாயப் பெருமக்களின் நலனையும் பாதுகாப்பதில் எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.

நேற்றைய தினம், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஜூன் 10 அன்று ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், நாடு முழுவதும் 75 பகுதிகளில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஏலம் விடுவதாக ஒரு அறிவிக்கை வெளியாகியுள்ளது.

டெல்டாவினை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்ய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க கூடாது என்பது தமிழ்நாடு அரசின் உறுதியான கொள்கையாகும்.

மேலும் எரிவாயு எடுக்க வடதெரு பகுதியை நீக்க வேண்டுமென்றும் எதிர்காலங்களில் தமிழ்நாட்டில் எந்த பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்றும் இந்திய பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளதாகவும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என்றும்,

தமிழ்நாட்டின் விவசாய பெருங்குடி மக்களின் நலனையும், காவிரிப் படுகை பகுதியின் வளத்தையும் ‘கண்ணை இமை காப்பது போல’ எங்கள் அரசு காக்கும் என்றும் உறுதிபடக் கூற விரும்புகிறேன்” என்று ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Admin

திமுக ஆட்சி எம்.ஜி.ஆருக்கு அவமானம் – ஜெயலலிதா குறித்தும் பேசி கொதிக்கும் மோடி

Pamban Mu Prasanth

ஊரடங்கில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…!

Admin

மகாபஞ்சாயத்து 2024: விவசாயிகள் ஐக்கிய முன்னணி அறைகூவல்

Admin

தோண்டத்தோண்ட சோழதேசம்… கங்கைகொண்ட சோழபுர அரண்மனை 2ஆம் பாகம் கண்டுபிடிப்பு!

Admin

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

ஜூலை 31 வரை ஊரடங்கு: புதிய தளர்வுகள்என்ன ?

Admin

பிளஸ்டூ மதிப்பெண் கணக்கீட்டு முறை அனைவருக்கும் திருப்தி அளிக்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Admin

‘‘1000 ரூபாய்” யார் யாருக்கு தெரியுமா? விளக்கம் கொடுத்த நிதியமைச்சர்

Admin

தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன் கைது

Admin

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு…. கூடுதல் தளர்வுகள் வழங்க பரிந்துரை

Admin

நான் என்ன பிரதமரா? கேள்வி எழுப்பிய மதன் பதில் கொடுத்த காவல்துறை!

Admin

Leave a Comment