ஆதார் அட்டையைக் காரணம் காட்டி 3 கோடி ரேஷன் அட்டைகள் நீக்கமா?: விளக்கம் கேட்கும் உச்ச நீதிமன்றம்

SHARE

ரேஷன் அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்பதற்காக 3 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டன – என்ற குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்ஜண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கொய்லி தேவி என்பவரின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், கொய்லி தேவியின் வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீது முன்வைத்திருந்தார்.

தனது கட்சிக்காரர் கொய்லி தேவியின் ரேஷன் அட்டையானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்பதற்காக ரத்து செய்யப்பட்டதாகவும், இதனால் கொய்லி தேவியின் 11 வயதே ஆன மகள் சந்தோஷி குமாரி கடந்த 2017ல் பட்டினிச் சாவை சந்தித்ததாகவும் கூறிய அவர், இப்படியாக நாடெங்கும் ரத்து செய்யப்பட்ட 3 கோடி ரேஷன் அட்டைகளை மீட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். 

மேலும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத ரேஷன் கார்டுகளைப் போலியானவை என்று சொல்லி மத்திய அரசு நீக்கிவிட்டதாகவும், கிராமப்புறங்களில் இணையக் கோளாறு மற்றும் தொழில் நுட்பக் கோளாறுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் மத்திய அரசு செயல்படுவதாகவும்  அவர் குற்றம் சுமத்தி இருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ஷரத் ஏ. போப்டே தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்தால் ஆதார் கட்டாயம் என்று ஏற்கப்படாத நிலையில், ஆதாரை சமர்பிக்காத 3 கோடி ரேஷன் அட்டைகளை நீக்கியது சரியா? – என்ற கேள்வி மீண்டும் முன்வைக்கப்பட, தலைமை நீதிபதி, ‘மூன்று கோடி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டனவா?’ என்று அதிர்ச்சியோடு கேட்டார்.

இந்த வழக்கில் மத்திய அரசுத் தரப்பில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமன் லேகி, ரேஷன் கார்டு வழங்குவது மத்திய அரசின் கடமை அல்ல, மாநில அரசின் கடமை. எனவே மனுதாரர் மத்திய அரசுக்கு எதிராகத் தவறாக வழக்கு தொடர்ந்து உள்ளார் – என்று பதில் அளித்தார்.

மத்திய அரசின் தரப்பும் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதை மறுக்கவில்லை என்பதால், இந்த வழக்கை பரிசீலிக்க உள்ளதாகவும், இது ஒரு தீவிரமான விஷயம் என்றும் கூறிய உச்சநீதிமன்றம், ‘ஆதாருடன் இணைக்கப்படாத ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டது குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்’ – என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மணமகனின் நண்பர்கள் கொடுத்த சர்ஃப்ரைஸ் GIFT..கடுப்பான மணமகள்.. வைரலாகும் வீடியோ

Admin

8 சிங்கங்களுக்கு கொரோனா!

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிவிப்பு..!!

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

Admin

75 வாரங்களுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

Admin

பாஜக அலுவலகம் கட்ட வைக்கப்பட்ட கல்லினை பிடுங்கி எறிந்த விவசாயிகள்

Admin

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு அமைச்சர் – அன்பில் மகேஷ் புறக்கணிப்பு

Admin

செப்டம்பர் 17 முதல் இந்த சேவை நிறுத்தம்.. சொமேட்டோ அதிரடி அறிவிப்பு

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

வருமானவரி செலுத்த முடியவில்லை… வட்டிமேல் வட்டி போடுகிறார்கள் – கங்கனா ரனாவத் வேதனை

Admin

ஆசியாவின் 2ஆவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த அதானி!

Admin

Leave a Comment