கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு செல்கிறார். இந்த ஆய்வில் ஆக்சிஜன், படுக்கை வசதி உள்ளிட்டவைகளை முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கெளசல்யா அருண்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்