சேவை கட்டணத்தை உயர்த்துவதற்கு தயாராகவே இருக்கிறோம் என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளது பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், பெரிய அளவுக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது திட்டமில்லை என்றும் சந்தையின் நிலவரத்துக்கு ஏற்பவே கட்டணத்தை உயர்த்த இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கட்டணத்தை உயர்த்துவது என்பது தவறான நடவடிக்கை அல்ல. குறைந்தபட்சம் கட்டணத்தை முந்தைய நிலைக்காவது உயர்த்த வேண்டும். எத்தனை நாட்களுக்கு ஒருவரை அழித்து ஒருவர் வாழ்வது?
அனைவரும் நிலைத்திருக்க வேண்டும் என்றால் பழைய நிலைமைக்கு கட்டணம் திரும்ப வேண்டும்” என்று சுனில் பார்தி மிட்டல் தெரிவித்திருக்கிறார்.
நாங்கள் மட்டும் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது. மற்ற நிறுவனங்கள் இணையும்போது தான் கட்டணத்தை உயர்த்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.