கர்நாடக கொடி மற்றும் அரசு முத்திரையினை பதித்த நீச்சல் உடையை விற்பனை செய்த அமேசான் நிறுவனத்திற்கு கர்நாடக அரசு கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் கொடி மற்றும் அரசு முத்திரை பதித்த நீச்சல் உடையை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான்,கனடா நாட்டில் விற்பனை செய்துள்ளது.இந்த சம்பவம் கர்நாடக மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக,கனடாவில் உள்ள அமேசான் நிறுவனத்திற்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என கூகுள் தேடுதல் தளத்தில் காண்பித்ததால் கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டு அந்த பதிவினை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்