தீர்ந்தது இம்சை பிரச்சனை – மீண்டும் திரையுலகில் களமிறங்கும் வடிவேலு..!

SHARE

‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படம் தொடர்பான விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர் – வடிவேலு இருவருக்கும் இடையே சுமூகதீர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’. இதன் 2 ஆம் பாகம் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி என்ற பெயரில் உருவாக உள்ளதாக இரு வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

ஆனால் ஆரம்பத்திலிருந்தே கதையில் வடிவேலு தலையிடுவதாகவும், இயக்குனர் சிம்புதேவனுடன் மோதல் போன்ற தகவல்கள் நிலவி வந்த நிலையில் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்தது. பிறகு வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

இதனால் வடிவேலுவால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது.நடுவில் கத்திச்சண்ட, மெர்சல் ஆகிய படங்களில் வடிவேலு நடித்தாலும் அவரால் முன்பு போல் பிரகாசிக்க முடியவில்லை.

கிட்டதட்ட 10 ஆண்டுகள் வடிவேலு இல்லாத படங்களே வெளியானதால் அவரது ரீ-எண்ட்ரி எப்போது என ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதனிடையே இந்த தயாரிப்பாளர்கள் சங்கம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் ஷங்கர் – வடிவேலு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், எந்தவொரு சுமுகமான முடிவுமே எட்டப்படவில்லை.

இந்நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ’23-ம் புலிகேசி 2′ திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார்.

மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வடிவேலு மீண்டும் முழுவீச்சில் இனி திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். இந்த செய்தி சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கேஜிஎஃப் – 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Admin

40 திருமணம் கூட செய்துகொள்வேன்: கடுப்பான வனிதா விஜயகுமார்

Admin

ஜகமே தந்திரம் படத்திற்கு சிறப்பு சேர்த்த ட்விட்டர் நிறுவனம்…!

Admin

சார்பட்டா பரம்பரை படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Admin

நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

Admin

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

ஜகமே தந்திரம் படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடல்… எங்கே ..? எப்போ தெரியுமா?

Admin

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை..!!

Admin

3ஆவது முறையாக திருமணம் செய்த பிரகாஷ்ராஜ் – குவியும் வாழ்த்து

Admin

தனுஷால் கெத்து காட்டிய “வேலை இல்லா பட்டதாரி”கள்…டிவிட்டரில் கொண்டாட்டம்

Admin

40 கல்யாணம் பண்ணுவேன் நான்: வனிதா பரபரப்பு பேட்டி!

Admin

கமலுடன் இணையும் வெற்றிமாறன்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Admin

Leave a Comment