எனது பிரச்சினையை தீர்த்து வைத்தவர் இவர்தான் – உண்மையை போட்டுடைத்த வடிவேலு

SHARE

தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகர் வடிவேலு தனது பிரச்சனையை தீர்த்து வைத்தது யார் என தெரிவித்துள்ளார்.

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் – நடிகர் வடிவேலு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவருக்கு கடந்த 4 வருடங்களாக சினிமாவில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டது. இந்த பிரச்சனை சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தால் தீர்த்து வைக்கப்பட்டது .

இதனை தொடர்ந்து நடிகர் வடிவேலு மீண்டும் முழுவீச்சில் சினிமாவில் நடிக்க உள்ளார். அவர் இயக்குநர் சுராஜ் இயக்கவுள்ள நாய் சேகர் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார். இதனை தமிழ் திரையுலகே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இதனிடையே வடிவேலு நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது புதிய படம் குறித்து நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இந்த பிரச்சினையை முடித்து வைத்தது தமிழ் குமரன்தான்.இவர் பாமக ஜி.கே.மணியின் மகன் ஆவார்.

தமிழ்குமரன் லைக்காவில் சி.இ.ஓ உள்ளார்.சுபாஷ்கரன் சார், நான் மற்றும் தமிழ் குமரன் சேர்ந்து பிரச்னையை தீர்த்து இயக்குநர் சுராஜிடம் புதிய படம் குறித்து பேசினோம்.

”வடிவேலு நீங்கள் நல்லா வரணும். மேலும் பல படங்கள் செய்ய வேண்டும்” என்று சுபாஷ்கரன் சார் என்னை வாழ்த்தினார். அவர் வாழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என வடிவேலு கூறினார்.

மேலும் இந்த படத்தில் ஒரு பாடல் பாடுகிறேன். சந்தோஷ் நாராயணன் தான் புதிய படத்தில் இசையமைக்கிறார். இந்த படத்தில் அவர் இசையமைக்க வேண்டும் என்று முதலிலேயே ஆசை இருந்தது.

இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, சந்தோஷ் நாராயணண் கூறிய முதல் வார்த்தை ” தலைவன் வடிவேலு எங்கே.. அவர் படத்துக்கு மியூசிக் போடாம இருப்பேனா என்பது தான். மேலும் இந்த படத்தில் நீங்கள் கண்டிப்பாக ஒரு பாடல் பாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாகவும் வடிவேலு தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கமலுடன் இணையும் வெற்றிமாறன்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Admin

டிரெண்டிங்கில் ‘எஞ்சாய் எஞ்சாமி’

Admin

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் : மேல்முறையீடு செய்கிறாரா நடிகர் விஜய்?

Admin

நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு… வேறு அமர்வுக்கு மாற்றம்

Admin

முட்டாள்தனமான கருத்தை நான் சொன்னதே கிடையாது: இம்ரான் கான்

Admin

ஒரு லட்சத்தை அபராதமா கட்ட விருப்பமில்லை : சொகுசு கார் வழக்கில் விஜய் தரப்பு வாதம்

Admin

ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை – நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்யும் சன்னி லியோன்!

Admin

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி… ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

“பிக்பாஸ்” ஓவியாவின் புதிய வெப் தொடர் இன்று ரிலீஸ்

Admin

நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்..!!

Admin

ஜகமே தந்திரம் படத்தில் இந்த 2 பாடல்கள் இடம்பெறாது…!

Admin

Leave a Comment