சார்பட்டா பரம்பரை படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

SHARE

.நியூயார்க் டைம்ஸ் சர்வதேச திரைப்பட பட்டியலில் சார்பட்டா பரம்பரை படம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷரா விஜயன்,ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் சார்பட்டா பரம்பரை கடந்த ஜூலை 22 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

அவரசநிலை காலக்கட்டத்தில் வடசென்னையில் இரண்டு பரம்பரைகளுக்கு இடையேயான குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்று மீம்ஸ் கிரியேட்டர்களின் டெம்பிளேட்டாக மாறியுள்ளது. இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்ட 5 சர்வதேச திரைப்படங்களின் பட்டியலில் சார்பட்டா பரம்பரை படமும் இடம் பெற்றுள்ளது.

மேலும் இந்த படம் பற்றியும், இயக்குநர் பா.ரஞ்சித் பற்றியும் பெரிய அளவில் பாராட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய திரைப்படம் சார்பட்டா பரம்பரை தான் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஃபேமிலி மேன் தொடரை நீக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை – அமைச்சர் தகவல்

Admin

ஷங்கரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோயினா? – வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Admin

உலகளவில் சிறந்த 25 படங்கள்! யோகிபாபு , தனுஷ் நடித்த படங்கள் தேர்வு!

Admin

நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்… விரைவில் கைது நடவடிக்கை?

Admin

வழியெங்கும் வாக்குவாதம்… சென்னை கொண்டு வரப்பட்டார் மீரா மிதுன்…

Admin

ஜகமே தந்திரம் படத்திற்கு சிறப்பு சேர்த்த ட்விட்டர் நிறுவனம்…!

Admin

சிரிக்க வைக்கிறதா அமேசானின் ‘எங்க சிரி பார்ப்போம்’ ரியாலிட்டி ஷோ?

யுவன் பிறந்தநாள் கொண்டாட்டம்… பாடல் பாடி அசத்திய சிம்பு, தனுஷ்..

Admin

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

ஆட்டத்துக்கு வந்த அண்ணாத்த… மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு.

Admin

வெளியானது நெற்றிக்கண் டைட்டில் பாடல்… உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள்…

Admin

நடிகர் மம்முட்டி மீது வழக்குப் பதிவு காரணம் என்ன??

Admin

Leave a Comment