சிம்பு நடித்துவரும் மாநாடு படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகர்கள் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உட்பட பல நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார்.
படத்தின் பட்ஜெட் 65 கோடி எனவும் இத்திரைப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ள நிலையில், ஜூன் 21-ஆம் தேதி படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ரிலீசுக்கு தயாராகி உள்ள மாநாடு படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வண்ணம் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி ஜூலை 21-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அன்று படத்தின் டிரெய்லரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.