‘‘1000 ரூபாய்” யார் யாருக்கு தெரியுமா? விளக்கம் கொடுத்த நிதியமைச்சர்

SHARE

மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் மிகவும் ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கானது மட்டுமே என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்த நிலையில்ஆட்சிக்கு வந்ததும் 1000 ரூபாய் விவகாரம் பேசு பொருளானது.

பாஜக எல்.முருகன் திமுகவின் ரூ.1000 திட்டம் சாத்தியமில்லைகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தரப்படும் என்பதை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார்? ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்

ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் இந்த திட்டத்தை தொடங்கவில்லை என அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பிய இதற்கிடையே1000 ரூபாய் வழங்குவதில் நிறைய சந்தேகங்கள் எழுந்தன.

அதில் குறிப்பாக ரேஷன் அட்டைகளில் குடும்ப தலைவராக பெண் இருந்தால் மட்டுமே தமிழக அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஒரு வதந்தி பரவியது.

இது உண்மையா என்றுகூட ஆராயமல், ஏராளமான பெண்கள் தங்கள் பெயரை ரேஷன் அட்டையில் மாற்றுமாறு அலுவலகங்களில் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் பெண்களுக்கு நிதியுதவு அளிக்கும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்த 1000 ரூபாய் அறிவிப்பும் குறித்தும் உரிய விளக்கம் அளித்துள்ளார்

அதன்படி,.குடும்ப தலைவரின் பெயரை மாற்ற தேவையில்லை என்று கூறிய
பிடிஆர் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் எல்லோருக்கும் வழங்கப்படாது சரியான பயனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதற்கான குழு அமைக்கப்படும் என கூறினார்

மேலும் ,இந்த திட்டத்தின் நோக்கமே இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்குவதுதான் என குடும்ப தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை

அதாவது, திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த உரிமை தொகை மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்பதைதான் தற்போது, அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் 1000 ரூபாய் விவகாரத்தில் நிலவிய குழப்பத்தை திமுக அரசு இன்றைய தினம் தெளிவுபடுத்தியுள்ளது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உள்ளாட்சி தேர்தல் எப்போது ? முதல்வர் ஆலோசனை

Admin

Justice for Fernanda: கூட்டுப்பாலியல் கொடுமை – தேசிய அவமானத்துக்கு தீர்ப்பு என்ன?

Pamban Mu Prasanth

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்; ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Admin

10 நிமிடம் தான் டைம்.. வங்கி மெசேஜ் குறித்து காவல்துறை எச்சரிக்கை

Admin

தன் மீது உள்ள பழியினை சட்டரீதியாக எதிர்கொள்வார் கே.டி.ராகவன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

Admin

அதிமுகவின் மகளிரணி செயலாளராக பா. வளர்மதி நியமனம்

Admin

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு.. சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Admin

போதை ஏறிபோச்சு.. ஊரடங்கில் ஒயின் குடித்த எலிகள்

Admin

காலில் மாஸ்க்போட்ட அமைச்சர்.. வைரலாகும் புகைப்படம்

Admin

தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன் கைது

Admin

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பா? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

Admin

Leave a Comment