10 நிமிடம் தான் டைம்.. வங்கி மெசேஜ் குறித்து காவல்துறை எச்சரிக்கை

SHARE

வங்கி கணக்கு முடக்கப்படும் என செல்போனிற்கு வரக்கூடிய மெசேஜ் லிங்கை தொட வேண்டாம் என சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபகாலமாக அங்கீகரிக்கப்பட்ட வங்கி மூலமாக வருவது போல் ஒரு லிங்க் மெசெஜ் அனைத்து செல்போன் எண்ணிற்கும் வருகிறது.

அந்த மெசேஜில் இந்த லிங்கை 10 நிமிடத்திற்குள் அழுத்தி உங்களது Kyc/pan card/ aadhar card விவரங்களை பதிவிட வேண்டும் எனவும் இல்லையென்றால் உங்களது வங்கி கணக்கு முடக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதனை நம்பி பொதுமக்கள் பலர் அந்த லிங்க் மூலமாக தங்களது விவரங்களை பதிவு செய்கின்றனர். அந்த சமயத்தில் அதாவது அடுத்த 2-3 நிமிடங்களில் குறிப்பிட்ட வங்கி கணக்கின் தனிப்பட்ட விவரங்களை மோசடி கும்பல் ஹேக் செய்து உடனடியாக ஏடிஎம் மூலமாகவும், ஷாப்பிங் மூலமாகவும் பணத்தை திருடி வருகின்றனர்.

இது போல் வரக்கூடிய மெசேஜை பொதுமக்கள் ஒருவரும் நம்பவேண்டாம் எனவும் வங்கியிலிருந்து இது போன்ற மெசேஜ் அனுப்பமாட்டார்கள் என சென்னை போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வீல்சேரில் விஜயகாந்த்.. சோகத்தில் ரசிகர்கள்…

Admin

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

பழனிசாமி தலைமையில் கூட்டம்… சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

Admin

பூமி பூஜையில் செருப்பு காலுடன் உதயநிதி – கிளம்பும் எதிர்ப்பு

Admin

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்டு… 11 முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

Admin

சென்னை ஏடிஎம்களில் நூதன கொள்ளை… ஹரியானாவில் ஒருவர் கைது

Admin

ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்

Admin

தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளது – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

Admin

தமிழ்நாடு நாள் சர்ச்சை – என்ன வரலாறு? எது தீர்வு?:

இரா.மன்னர் மன்னன்

ஊருல யாருக்கும் கொரோனா வரலை… எல்லாம் அம்மன் மகிமை… நன்றி தெரிவித்த மக்கள்

Admin

தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன் கைது

Admin

வணிக வரித்துறை புகார்களுக்கு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை : அமைச்சர் மூர்த்தி தகவல்

Admin

Leave a Comment