தன் மீது உள்ள பழியினை சட்டரீதியாக எதிர்கொள்வார் கே.டி.ராகவன்: பாஜக தலைவர் அண்ணாமலை

SHARE

பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் குறித்த சர்ச்சை வீடியோ ஒன்று யூ-டியூபில் வெளியான நிலையில், பாஜக கட்சிப் பொறுப்பிலிருந்து கே.டி.ராகவன் ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:

சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த செய்திகளை அறிந்தேன்.

இந்த வீடியோவை வெளியிட்ட யூ-டியூபர் மதன் ரவிச்சந்திரன் என்னை சந்தித்துப் பேசியது உண்மை.

முதல் முறையாக என்னை கட்சி அலுவலகத்தில் அவர் சந்தித்துப் பேசியபோது, கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், உடனடியாக அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றங்களால் மட்டும் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விடக்கூடாது. அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன்.

ஆகவே, அந்த வீடியோ பதிவுகளை எங்களிடம் காட்சிப்படுத்தினால், அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினேன். ஆனால் அவர் பதிவுகளை என்னிடம் ஒப்படைக்க மறுத்து விட்டார்.

அடுத்த நாள், மறுபடி என்னை அலுவலகத்தில் சந்தித்த மதன் ரவிச்சந்திரன், வலுவான வீடியோ பதிவுகள் உள்ளன. அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.

ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ பதிவை நம்பி மட்டும் அதன் உண்மைத்தன்மையை அறியாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் அதன் மேல் விசாரணை செய்யாமல் குற்றம் சாட்டும் நபரின் வாய் வார்த்தையை மட்டும் நம்பி எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்..? ஆகவே, மதன் ரவிச்சந்திரன் இரண்டாம் முறை வலியுறுத்திய போதும் ஆதாரமாக அவர் சுட்டும் பதிவுகளை சமர்ப்பிக்கக் கூறினேன்.

அதன்பின், மூன்றாவது முறையாக அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி, நான் ஏற்கெனவே கேட்டுக் கொண்டபடி எனக்கு உடனடியாக நியாயம் கிடைக்குமா..? நடவடிக்கை எடுக்கப்படுமா..? என்று கேட்டு இருந்தார். கட்சி ரீதியான நடவடிக்கை என்ற முடிவையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வீடியோ பதிவுகளை வெளியிடப் போவதாக குறுஞ்செய்தியில் கூறியிருந்தார்.

முன்னர் இரண்டு முறை நேரில் சந்தித்தபோது நான் கூறியபடி குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல், நடவடிக்கை எடுக்க முடியாது என்ற என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன்.

இன்று காலை கே.டி.ராகவனிடம் பேசினேன். 30 ஆண்டு காலத்திற்கு மேலாக உண்மையாகவும், நேர்மையாகவும் கட்சி பணியாற்றிய தன் மீது களங்கம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், கட்சியின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் எண்ணத்துடன், உயர் தொழில்நுட்பத்தில் தனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும், தான் இதை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் கே.டி.ராகவன் தெரிவித்தார்.

மேலும், கட்சியின் மாண்பையும், செம்மையையும் கருதி, தான் கட்சியின் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். நானும் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டேன். கே.டி.ராகவன் அவர்கள் இந்த பிரச்னையை முறைப்படி சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என, அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தை உளவு பார்க்க வந்துள்ளாரா..புதிய ஆளுநர்?

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

Admin

எதிர் கட்சிக்காரர்களால் என்னால் உறங்கவே முடியவில்லை: மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு கண்ணீர் பேச்சு!

Admin

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

எங்களைத் தாண்டித்தான் சூர்யாவை நெருங்க முடியும் – சீமான் எச்சரிக்கை!

Admin

என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

Admin

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

Pamban Mu Prasanth

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

Admin

உதயநிதி ஸ்டாலின் வெற்றி செல்லாது.. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Admin

Leave a Comment