சிவசங்கர் பாபா ஜாமீன் மனு.. சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

SHARE

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்களில் சிபிசிஐடி ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சிவசங்கர் பாபா மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த 3 போக்சோ வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில், 2 போக்சோ வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா-வை கைது செய்த சிபிசிஐடி போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதனையடுத்து சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்களில் சிபிசிஐடி ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி பதில்

Admin

உன்னால் முடியாது தம்பி காணொலி சர்ச்சை. மக்கள் நீதி மய்யத்துக்கு நக்கலைட்ஸ் வலைக்காட்சி பதில்.

சோனியாகாந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Admin

போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Admin

நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய குழு – முதல்வர் அறிவிப்பு..!

Admin

ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Admin

உதவி கேட்ட பவானி…கரம் நீட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Admin

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் திடீர் டெல்லி பயணம்..!!

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

மேகதாது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!!

Admin

தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி!

Admin

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

Leave a Comment