துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ போக்சோ சட்டத்தில் கைது!

SHARE

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சென்னை மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

சென்னையில் துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதவரம் காவல் நிலையம் காவல் உதவி ஆய்வாளர் சதீசை மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 பாலியல் தொல்லைக்கு உதவியதாக சிறுமியின் தாய் , பெரியம்மாவும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

எஸ்.ஐ.சதீஷ்க்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தந்தை புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ.சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாதவரம் பால்பண்ணை அருகே வசிக்கும் ரேவதி என்பவருடன் எஸ்ஐ சதீஷ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது .

இந்த பழக்கத்தின் காரணமாக காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் ரேவதியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு சிறுமியின் தாய் ரேவதி மற்றும் அவரது உறவினர் ஒருவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனால் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கி அடையாளத்தை சிதைக்காதீர்கள்: ராமதாஸ் அறிக்கை

Admin

உற்சாக வாக்கிங்… திறக்கப்பட்ட டீக்கடைகள்… இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…

Admin

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

சொல்லின் செல்வர் சோ.சத்யசீலன் காலமானார்!

Admin

இன்று முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

Admin

சுஷில்ஹரி பள்ளி ஆசிரியை முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்

Admin

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது

Admin

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

85% கல்வி கட்டணத்தை வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி..!!

Admin

7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்காது – கே.எஸ்.அழகிரி

திமுகவுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்..!!!

Admin

Leave a Comment