உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை..!!

SHARE

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை நடத்தப்படவுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேதி மாற்றப்பட்டு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எலான் மஸ்க் செய்த வேலையால் தமிழக நிறுவனத்திற்கு ரூ. 7 கோடி லாபம்?

Admin

தமிழக அரசின் திட்டத்தை கேலி செய்து… சர்ச்சை கார்டூன் வெளியிட்ட துக்ளக்!

Admin

ரவுடிகளுக்கு எதிரான சட்டம்… பேரவையில் நிறைவேறிய சுதர்சனத்தின் கோரிக்கை…

சென்னையில் இலவச WiFi வசதி -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Admin

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 3 மாவட்டங்களில் முதல்வர் நாளை ஆய்வு

இந்த பட்ஜெட் டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் பட்ஜெட் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Admin

ஊரடங்கு தொடருமா? முதல்வர் நாளை ஆலோசனை

Admin

திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

Admin

முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி ரெய்டு..!!

Admin

ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தம்: ஸ்டெர்லைட் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Admin

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

Admin

பா.ரஞ்சித் மீதான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Admin

Leave a Comment