ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தம்: ஸ்டெர்லைட் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

SHARE

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிய நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

அந்த வகையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தென்மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆலையின் உற்பத்தி நாளையுடன் முடிவடைகிறது.

அதனால், ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இம்மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.ஆகவே ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கான கால அவகாசத்தை நீடிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இம்மனு மீதான உத்தரவை ஒரு வாரத்தில் பிறப்பிப்பதாக கூறி ஒத்திவைத்தார். இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

Admin

ஓ.பி.எஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்.!!

Admin

நீட் தேர்வில் விலக்கு…புதிய சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல்..

Admin

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

காமத்தை விட அழகானது கண்ணியம் – ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் தொகுப்பு.

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

பப்ஜி மதன் மீது 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சைபர் க்ரைம்!

Admin

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

”1 தொகுதிதானா? மாநிலங்களவை ல பாத்துக்குறேன்” – வைகோ சொன்னது என்ன?

Admin

சவுக்கு சங்கர் விபத்தில் இறந்தாரா?…கடைசியா என்னையே கண்டெண்ட் ஆக்கீட்டீங்களேடா!

Admin

மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

Pamban Mu Prasanth

ஆத்தாவுக்கே இந்த நிலமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

Leave a Comment