நீட் தேர்வில் விலக்கு…புதிய சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல்..

SHARE

தமிழகம் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில் புதிய சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் பல மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாகி போனது தான் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக நீட் தேர்வால் தமிழகத்தில் மட்டும் இதுவரை 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

கொரோனா காரணமாக தாமதமாக இந்தாண்டு நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் கோழையூர் மாணவர் தனுஷ் தேர்வு எழுத செல்வதற்கு முன்பே தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடப்பு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளார். இந்த தீர்மானம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஏற்கனவே தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைத்து உத்தரவிட்டார்.

அந்த குழுவானது கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

Admin

உதயநிதி ஸ்டாலினுடன் இறகுப் பந்து விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

‘‘அவர்களுக்கு ஒன்றிய அரசு என்றால் எங்களுக்கு பாரத பேரரசு ’’- குஷ்பு

Admin

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது: கமல்ஹாசன்

Admin

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

உதவி கேட்ட பவானி…கரம் நீட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Admin

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு.

சென்னை ஏடிஎம்களில் நூதன கொள்ளை… ஹரியானாவில் ஒருவர் கைது

Admin

திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்… முதல் நாள் வசூல் இவ்வளவு கோடியா?

Admin

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

இரா.மன்னர் மன்னன்

அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகும்.. ஓபிஎஸ் அறிக்கை

Admin

Leave a Comment