“கள்ளக்காதலன் மீதான கோபத்தில் தான் குழந்தையை அடித்தேன்’ – கொடூர தாய் பகீர் வாக்குமூலம்

SHARE

விழுப்புரம் அருகே பெற்ற குழந்தையை தாய் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் திடீர் திருப்பமாக அவரது வாக்குமூலம் அமைந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு பெற்ற குழந்தையை தாய் கொடுமைப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம் மணலப்பாடி அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன், ஆந்திர மாநிலம் ராம்பள்ளியைச் சேர்ந்த துளசி என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய தம்பதியினர் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் வேறு ஒருவரிடம் தொடர்ந்து தொலைபேசியில் துளசி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் துளசியை ஆந்திராவில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வடிவழகன் அனுப்பிவிட்டார்.

இதில் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக 2 வயதான குழந்தை பிரதீப்பை துளசி கொடுமைப்படுத்தி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தாய் துளசி மீது செஞ்சி சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் தந்தை வடிவழகன் புகார் அளித்தார்.

இதனையடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளியில் உள்ள தாய் வீட்டில் துளசியை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலன் சென்னையை சேர்ந்த பிரேம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் தான் குழந்தையை தாக்கியதாக தாய் துளசி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, துளசியின் கள்ளக்காதலன் பிரேம்குமாரை கைது செய்ய சத்தியமங்கலம் போலீசார் ஆறு பேர் கொண்ட தனிப்படை சென்னை சென்றுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

முதல்வரிடம் ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

கோடநாடு: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு: இன்று முடிவு?

Admin

பப்ஜி மதன் வழக்கு நாளை மீண்டும் விசாரணை!

Admin

நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய குழு – முதல்வர் அறிவிப்பு..!

Admin

மதுபானங்களுக்கு இன்று முதல் 20% சிறப்பு வரி – மது பிரியர்கள் அதிர்ச்சி

Admin

ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி இடமாற்றம்…!

Admin

பாஜக இரட்டை வேடம் போடுகிறது : ம.நீ.மய்ய தலைவர் கமல்ஹாசன்

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

வாட்ஸ் அப் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு

Leave a Comment